You are here

திரைச்செய்தி

இளையராஜா இசையில் நடித்ததில் பெருமை

எனது தாத்தா, அப்பா படங்களுக்கு இசையமைத்த இளையராஜா இப் போது எனது படத்துக்கும் இசை அமைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார். விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படத்துக்கு ‘60 வயது மாநிறம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்து வருகிறார்கள். வி.கிரியே‌ஷன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இளைய ராஜா இசையமைத்துள்ளார்.

டாப்சி: பொழுதுக்கும் அழுது ஒப்பாரி வைக்கப் பிடிக்காது

பொழுதுக்கும் அழுது வடியும் பாத்திரங்களிலும் மரத்தைச் சுற்றிச் சுற்றி கவர்ச்சிப் பொம்மையாக வந்து செல்லவும் பிடிக்காது. அதற்கென்றே அதிக அளவில் நடிகைகள் உள்ளனர். ஒருசில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களின் நினைவில் நிற்கும் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு மட்டுமே இப்போது எல்லாம் சம்மதித்து வருகிறேன் என்கிறார் டாப்சி. ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானபோது பொம்மை போல் வந்து சென்ற வெண்ணிற தேவதை டாப்சி, இப்போது பாலிவுட்டில் பரபரப்பான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் ‘பிங்க்’ படத்தில் நடித்தபின் அவர் முன்னணி நடிகையாகிவிட்டார்.

மரண நடனம் ஆடினால் போலிசார் நடவடிக்கை

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளைக் கலக்கிய கிகி சவால் நடன விளையாட்டு இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது. ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை இந்த கிகி சவாலை ஏற்று காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் ரெஜினா கசாண்ட்ராவும் இந்தச் சவாலை தானும் நிறைவேற்றி இருப்பதாக இப்போது காணொளியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆளில்லா தீவில் சிக்கித் தவித்த ‘பூமராங்’ படக்குழுவினர்

கொட்டும் மழையில் ஆள் இல்லாத தீவு ஒன்றில் சிக்கிக் கொண்ட அனு பவத்தைப் பெற்றுள்ளனர் ‘பூமராங்’ படக்குழுவினர். அண்மையில் ஒரு பாடல் காட் சியைப் படமாக்க அந்தமான் அருகே உள்ள ஹாவ்லாக் எனும் தீவுப் பகுதிக்குச் சென்றிருந்தனராம். அப் போது வானிலை மோசமாக இருந்திருக்கிறது. “படப்பிடிப்பு தொடங்கும்போதே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹாவ்லாக் தீவுக்கு அந்தமானின் போர்ட் பிளேர் பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் படகு இயக்கப்படும். எனவே அந்தப் படகுக்காரரிடம் முன்கூட்டியே பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்தி ருந்தோம்.

‘கும்கி 2’ல் நாயகியானார் நிவேதா

‘கும்கி’ இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபுசாலமன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கும்கி’ தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்போது யானையை மட்டுமே தொடர்புபடுத்தி, வேறு நடிகர்கள், வேறு கதைக்களத்துடன் ‘கும்கி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பிரபு சாலமன். இதற்காக நாயகியை முன்னிலைப்படுத்தித் திரைக்கதை அமைத்துள்ளாராம். இதையடுத்து நிவேதா பெத்துராஜிடம் கதை சொல்லியிருக்கிறார். கதை கேட்டது முதல் இந்தப் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக உள்ளாராம் நிவேதா.

“பொருத்தமானவர் கிடைக்க வேண்டும்”

பெண்கள் என்றால் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்கிறார் பிரியா ஆனந்த். திருமணம் குறித்துப் பெண்கள் சுயமாக முடிவெடுப்பதே நல்லது என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “நம் பாட்டி காலத்தில் தான் பெண்கள் என்றால் கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. திருமணம் செய்யாமலேயே பல பெண்கள் வாழ்கி றார்கள். “என்ன படிக்க வேண்டும்? எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் சரியாக முடிவு செய்யும் பெண்களுக்கு எப்படிப்பட்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற பக்குவமும் உள்ளது.

மீண்டும் போலிஸ் வேடத்தில் சேதுபதி

‘ஜுங்கா’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி. இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்கு ‘சேதுபதி-2’ என்று பெயர் வைக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் ‘திருடாதே’ அல்லது ‘மலைக்கள்ளன்’ ஆகிய இரு தலைப்புகளைப் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம். இரண்டுமே எம்ஜிஆர் நடித்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகள். இந்தப் புதுப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

இந்தியில் வெற்றி பெற்ற ‘குயின்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிரம்மாண்டமாக மறுபதிப்பு செய்யப்படுகிறது. மீடியன்ட் நிறுவனம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட்ஸ் மஹாலட்சுமி’, கன்னடத்தில் ‘பட்டர்ப்ளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார்.

காதல் காவியமாக உருவாகும் புதுப்படம்

புதுமுகங்கள் யோகி, வர்‌ஷிதா அறிமுகமாகும் படம் ‘பார்த்திபன் காதல்’. வள்ளிமுத்து இயக்கு கிறார். இவர் ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டியிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றியவர். “இது உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம். கதைக்களம் காதலாக இருந்தாலும் திரைக்கதை புதி தாக இருக்கும். “யோகிக்கு ஓவியக் கல்லூரி மாணவர் வேடம். வர்‌ஷிதா கிரா மத்து கல்லூரி மாணவியாக திரையில் தோன்றுவார். “என்னதான் அடிதடி, திகில், நகைச்சுவைப் படங்கள் வந்தா லும் காதல் கதைகளுக்கு மட் டும் என்றுமே ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும். காதலுக்கு எப்படி அழிவு இல்லையோ அதே போல்தான் காதல் படங்களும்.

கலகலப்பான 'கன்னிராசி'

எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் உரு வாகி வருகிறது ‘கன்னி ராசி’. கூட்டுக் குடும்பப் பின்னணியில் கலகலப்பான படைப்பாக உருவாகிறது. இருபதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங் களைக் களம் இறக்கியுள்ளார் இயக்கு நர். பல ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் படம் இயக்கிய பாண்டியராஜனும் இவர்களில் ஒருவராம்.

Pages