You are here

விளையாட்டு

2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்த மூன்று ஆசியான் நாடுகள் விருப்பம்

தென்கிழக்காசியாவைச் சேர்ந்த தாய்லாந்து, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகள், 2034 ஆம் ஆண்டில் நடைபெறும் உலக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றை ஏற்று நடத்த விண்ணப்பிக்கக் கூடும். அவற்றில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் மலேசியாவும் அதில் இணையலாம் என்று மலேசியாவின் பாஹாங் மாநில மன்னரும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினருமான திரு அப்துல்லா சுல்தான் அகமது ஷா தெரிவித்திருக்கிறார். மலேசிய அரசாங்கமும் மலேசிய காற்பந்துச் சங்கமும் சம்மதித்தால் இது சாத்தியமாகலாம் என்றார் அவர்.

சட்டையை அணிய சிரமப்படும் சாலா

எகிப்தின் தேசிய அணியைச் சேர்ந்த நட்சத்திர காற்பந்தாட் டக்காரர் முகமது சாலா, தோள்பட்டை காயத்தால் தமது அணியின் சட்டையை அணி வதற்கு சக அணியினர் மூவரின் உதவி தேவைப்பட்டதாக, அக்குழுவின் பயிற்சியின்போது அவர்களைப் பார்த்துக்கொண் டிருந்த ஏஎஃப்பி நிருபர்கள் தெரிவித்தனர். 1990க்கு பிறகு, மீண்டும் கால் இறுதிக்கு முந்திய சுற்றுக்குச் செல்லும் கனவு, லிவர்பூல் ஆட்டக்காரரான சாலாவின் மூலம் நனவாகும் என்று நினைத்தது எகிப்து. இருந்தபோதும், கடந்த வெள்ளிக்கிழமை, உருகுவேயிடம் எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றதை சாலா, திடலுக்கு வெளியிலிருந்து காண வேண்டியிருந்தது.

முக்கிய வீரர்கள் காயம்; பெல்ஜியத்துக்கு வந்த சோதனை

சோச்சி: ரஷ்ய நகரான சோச்சியில் இன்று ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம், பனாமா அணிகள் மோதுகின்றன. இவ்விரண்டு அணி களும் மோதும் முதல் உலகக் கிண்ணப் போட்டி என்பதால் இரு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த ஒன்பது உலகக் கிண்ணத் தொடக்க ஆட்டங்களில் வாகைசூடிய பெல்ஜியத்துடன் இறுதி தகுதிச்சுற்றின் பத்துப் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்ற பனாமா மோதுகிறது.

36 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தோல்வியடைந்த பெரு

மாஸ்கோ: உலக அரங்கில் பெரி தாக சாதிக்காத பெருவும் டென் மார்க்கும் ‘சி’ பிரிவின் இரண் டாவது ஆட்டத்தில் சந்தித்தன. இரு அணிகளும் பலமாக மோ தி க் கொ ண் ட போ தி லு ம் வெற்றி டென்மார்க்கிற்குச் சென் றது. கிட்டத்தட்ட 36 ஆண்டு களுக்குப் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தில் பங்கேற்ற பெரு கோல் எதுவும் போடாமல் தோல் வியைத் தழுவியது. கடைசியாக 1982 உலகக் கிண்ணப் போட்டி யில் பங்கேற்ற பெரு, தொடக்கச் சுற்றிலேயே வெளியேறியது. அதன் பிறகு உலகக் கிண்ண ஆட்டத்தின் பக்கமே அது திரும்பிப் பார்க்கவில்லை. இருப்பினும் பெரு அணியின் தலைவர் பாவ்லோ குரேரோவுக்கு இது மறக்கமுடியாத ஆட்டமாகும்.

மெஸ்ஸி தடுமாற்றம்; ரசிகர்கள் ஏமாற்றம்

மாஸ்கோ: உலகக் கிண்ண ஆட் டங்களில் அவ்வப்போது அதிசயங் கள் நிகழ்வது உண்டு. உலகின் பெரிய அணி உலகின் சிறிய அணியை வெல்ல முடியாமல் திணறிய அதிசயம் நேற்று முன் தினம் ‘டி’ பிரிவில் அர்ஜெண்டினா =ஐஸ்லாந்து மோதலின்போது நடந்தது. அர்ஜெண்டினா தமது முதல் ஆட்டத்தில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தும் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர் களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும், உலக அரங்கில் நட் சத்திர ஆட்டக்காரராக ஜொலிக் கும் லயனல் மெஸ்ஸி மிகவும் எளிதான பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடிக்கத் தவறினார்.

இருபது ஆண்டுகளுக்குப் பின் முதல் வெற்றியை ஈட்டிய ஈரான்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கிண்ணப் போட்டிகளில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ வீரர் அஸிஸ் பொஹடோஸ் 95வது நிமிடத்தில் அடித்த சொந்த கோலால் 1-0 என்ற கோல் கணக் கில் வெற்றியை ருசித்தது. ஒட்டு மொத்தத்தில், உலகக் கிண்ணப் போட்டிகளில் அக்குழு பெற்ற இரண்டாவது வெற்றி இதுதான். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தாங்கள் எதிரணியின் வலையை நோக்கி ஒருமுறைகூட பந்தை உதைக்காதபோதும் எதிர் பாராது கிட்டிய வெற்றியால் அவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக் காடிப் போயினர்.

போக்பா கோலால் கரைசேர்ந்த பிரான்ஸ்

பால் போக்பா (நடுவில்).

கஸன்: ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் இருந்தபோது பால் போக்பா அடித்த கோலால் ஆஸ்திரேலியா 2-=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றி யுடன் தொடங்கி இருக்கிறது முன்னாள் வெற்றியாளரான பிரான்ஸ். ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரான்சும் ஆஸ்திரேலியாவும் கஸன் அரீனா விளையாட்டரங்கில் நேற்று மோதின. முற்பாதி கோலின்றி முடிய, 58வது நிமிடத்தில் அன்டோய்ன் கிரீஸ்மனின் பெனால்டி கோல் மூலம் பிரான்ஸ் முன்னிலைக்குச் சென்றது.

ரொனால்டோ அதிரடி

டியேகோ கோஸ்டா (இடது)

சோச்சி: இப்போதைக்கு உலகின் சிறந்த காற்பந்து வீரர் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் தமது அணி யைத் தோல்வியின் பிடியிலிருந்து மீட்டதோடு, ‘ஹாட்ரிக்’ கோலடித்து ஆட்டத்தை 3=3 என்ற கோல் கணக்கில் சமன் காணச் செய்து ஆட்ட நாயகனாக மிளிர்ந்தார். ஆட்டத்தின் நான்காவது நிமி டத்திலேயே பெனால்டி மூலம் கோல் அடித்து அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார் ரொனால்டோ.

உலகக் கிண்ணப் போட்டியில் ரசிகர்களின் வண்ண அலங்காரம்

ரஷ்யாவின் பல நகரங்களில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. விளையாட்டரங்கங்களுக்கு உள்ளே வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தைக் காட்டுவதற்கு முன்பே வெளியே ஒன்று கூடும் ரசிகர்கள், கண்களைப் பறிக்கும் வண்ணமயமான ஆடை அலங்காரங்களுடன் கொண்டாடி வருகின்றனர். (மேல்படம்) தமது நாட்டுக் கொடியின் நிறங்களுடன் புலியைப் போல வேடமிட்டிருக்கும் கொலம்பிய ரசிகர்.  ராய்ட்டர்ஸ்

ரஷ்ய கோல் மழையில் நிலைகுலைந்த சவூதி

மாஸ்கோ: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கோல் மழையுடன் தொடங்கி உள்ளது. போட்டியை ஏற்று நடத்தும் ரஷ்யா நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 5=0 எனும் கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தியது. கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழாவுக்குப் பிறகு போட்டியின் முதல் ஆட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் வேகம் காட்டிய சவூதி, நேரம் ஆக ஆக ரஷ்யாவின் பிடியில் சிக்கியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் ரஷ்யாவின் யூரி கசின்ஸ்கி.

Pages