சிங்கப்பூரில் வீடில்லாத 1,000 பேர் திறந்தவெளியில் உறங்குவதாக ஆய்வில் தகவல்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் வீடில்லாமல் திறந்தவெளியில் படுத்து உறங்குவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இதில் பத்தில் எட்டு பேருக்கு அதிகமானோர் ஆண்கள் என்றும் இவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருவாய் ஈட்டும் துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள் போன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு திறந்தவெளியில் படுத்துறங்குவோரில் அதிகமானோர் பழம்பெரும் வீடமைப்பு பேட்டைகளான நகர்ப்புற, பிடோக், காலாங் ஆகிய இடங்களில் படுத்து உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் ஒன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை இவ்வாறு திறந்த வெளியில் படுத்து உறங்கி வந்துள்ளனர் என்றும் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளியில் படுத்து உறங்குவதாகவும் கூறப்படுகிறது. வெற்றுத் தளங்கள், வர்த்தகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கல்விக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் இங் கோக் ஹோ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

இவருக்குக் கீழ் செயல்பட்ட 500 தொண்டூழியர்கள் 12,000 புளோக்குகள், பல்வேறு பொது மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் ஆகியவற்றைப் பார்த்து திறந்த வெளியில் படுத்து உறங்குவோர் பற்றி கணக்கெடுத்தனர்.

இவர்கள் இரவு 11.30 மணிக்கு மேல் தங்கள் பணியைத் தொடங்குவர். இதில் எத்தனை பேர் வெளியில் படுத்து உறங்குகின்றனர் அல்லது படுத்துறங்க தயாராகின்றனர் என்று கணக்கெடுப்பர். இவ்வாறு திறந்தவெளியில் படுத்து உறங்குவோரிடம் ஏதாவது ஒரு படுக்கை விரிப்பு இருப்பதையும் காண முடிந்ததாக ஆய்வு கூறுகிறது.

மேலும், ஆய்வில் வீடில்லாத 88 பேரிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. வீடில்லாத 10 பேரில் அறுவர் வேலை செய்பவர்கள் என்றும் இவர்களின் இடைநிலை வருமானம் $1,400 என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் தேசிய அளவிலான இடைநிலை வருமானம் $3,467 என்றும் ஆய்வு கூறுகிறது.

வீடில்லாதவர்களில் பாதிப் பேர் தங்களுக்கு வேலை இல்லாதது, நிரந்தர வேலை இல்லாதது, அல்லது மிகவும் குறைந்த வருமானம் ஈட்டுவதைக் காரணங்களாகக் கூறினர். மேலும், குடும்ப சச்சரவுகளையும் மற்றொரு முக்கிய காரணமாக இவர்கள் கூறினர்.
இவர்களில் 26 விழுக்காட்டினர் மானியத்துடன் கூடிய வீவக வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் எனினும், இவர்களில் சிலர் கூடத் தங்கியிருப்போருடன் ஏற்படும் சச்சரவு காரணமாக வீடுகளில் படுத்து உறங்குவதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!