ஹியுண்டே மோட்டார் குழுமத்தின் $400 மி. அதிநவீன புத்தாக்க மையம் சிங்கப்பூரில் 

எதிர்காலத்தில் வாகனமோட்டிகள் தங்­க­ளுக்கு விருப்­ப­மான மின்­சார காரை கைபேசி மூலம் வாங்கி, அதை விருப்­பத்­துக்கு ஏற்ப வடி­வமைத்து, அது தயா­ரா­ன­தும் சிங்­கப்­பூ­ரின் ஹியுண்டே பணி மனையி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரின் உயர் தானி­யக்­கத் தொழிற்­சா­லை­யில் தங்­க­ளின் வாக­னம் உரு­வா­வதை வாடிக்­கை­யா­ளர்­கள் காண­வும் முடி­யும்.

ஜூரோங் வட்டாரத்தில் 2022ஆம் ஆண்டிறு­திக்­குள் கட்டி முடிக்­கப்­ப­ட­வுள்ள ‘ஹியுண்டே மோட்­டார் குழும புத்­தாக்க மையம்’ உல­கிலேயே இவ்­வகை பணி­மனை­களில் முத­லா­வ­தா­கும்.

நேற்று காலை நடை­பெற்ற திட்­டத்­தின் மெய்­நி­கர் நிலஅகழ்வு நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் லீ சியன் லூங், தென்­கொ­ரிய வர்த்­தக, தொழில் மற்­றும் எரி­சக்தி அமைச்­சர் சங் யுன்-மோ மற்­றும் ஹியுண்டே மோட்­டார் குழு­மத்­தின் நிர்­வா­கத் துணைத் தலை­வர் இயூ­சான் சுங் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

இத்­திட்­டத்­திற்­காக தென்­கொரிய கார் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஹியுண்டே செய்­துள்ள முத­லீடு குறித்து பிர­த­மர் லீ, “ஹியுண்டே குழுமம் அதன் புதிய வசதியை சிங்­கப்­பூரில் அமைக்க முடி­வெ­டுத்­தி­ருப்­பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கிட்­டத்­தட்ட $400 மில்­லி­யன் மதிப்­பி­லான இந்த முத­லீட்டின் மூலம் 2025ஆம் ஆண்டில் இருந்து ஒவ்­வோர் ஆண்­டும் 30,000 வாக­னங்­கள் வரை தயா­ரிக்­கலாம்,” என்று தெரி­வித்­தார்.

பாகங்களை ஒன்றுசேர்த்து மின்சார கார் உருவாக்கும் சிறிய அளவிலான வசதியை இம்மையம் கொண்டிருக்கும். அதன்மூலம் ஆண்டிற்கு 30,000 வாகனங்கள் வரை தயாரிக்க முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

புதி­தாக கட்­டப்­படும் மையம், நட­மாட்­டக் கருத்­தாக்­கங்­கள் தொடர்­பி­லான ஹியுண்டே நிறு­வனத்­தின் ஆய்வு, உருவாக்கப் பணி­க­ளுக்கு ஒரு திறந்த, புத்­தாக்க ஆய்­வகமாகச் செயல்படும்.

மேலும், 28,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அதி­ந­வீ­ன­ம­ய­மாக உரு­வாக்­கப்­படும் இம்­மை­யத்தில் பயணி வானூர்­தி­கள் தரை­யி­றங்­கும் தளம் ஒன்­றும் அமையும்.

இந்த மையத்­தில் தயா­ரா­கும் கார்­கள் உள்­ளூ­ரில் விற்­ப­னை­யாகும். இவற்­றுக்­கான ஏற்­று­மதி திட்­டங்­கள் பின்­னர் நடப்­புக்கு வரும் என்று கூறப்­ப­டு­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளின் விருப்­பத்­திற்கு ஏற்ப கார்­களை வடி­வ­மைக்க, அறி­வார்ந்த அம்­சங்­களை உரு­வாக்­கும் வழி­கள் குறித்து ஹியுண்டே, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து செயல்­படும்.

“விநி­யோ­கத்­திற்கு கார் தயா­ரா­ன­தும், அது கட்­ட­டத்­தின் மேல் தளத்தில் 620 மீட்­டர் உயரத்தில் உள்ள சோத­னைத் தடத்திற்கு மாற்­றப்­படும். வாடிக்­கை­யா­ளர் அங்கு வாக­னத்தை ஓட்­டிச் சோதித்­துப் பார்க்­க­லாம்,” என்­று ஹியுண்டே தெரிவித்தது.

ஏழு மாடிக் கட்­ட­டத்­தின் மேல்­தளத்தில் இந்த சோத­னைத் தடம் அமைந்­தி­ருக்­கும். கிட்­டத்­தட்ட 40 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் சிங்­கப்­பூ­ரில் கார் தயா­ரிப்­புப் பணி­கள் ஹியுண்­டே­யின் இம்­மு­டி­வால் தொடங்கவுள்ளன.

“மின்­சார வாக­னங்­களில் குறைவான இயந்­தி­ரப் பாகங்­களும் அதிக மின்­ன­ணுவியல் அம்சங்களும் உள்ளன. இது சிங்­கப்­பூ­ரின் வலி­மைக்கு ஏற்­ற­தாக இருக்­கும். அத­னால்­தான், தானி­யங்கி மின்­ன­ணுச் சாதனங்களைத் தயா­ரிக்­கும் ‘டெல்ஃபி’, ‘இன்­ஃபினி­யோன்’ போன்ற பன்னாட்டு நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் சில கால­மா­கவே காலூன்­றி­யுள்­ளன,” என்­றார் பிர­த­மர் லீ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!