சிங்பாஸ் மூலம் ஆவணங்களில் கையெழுத்திடலாம்; பாதுகாப்பான புதிய அம்சம் அறிமுகம்

தேசிய மின்­னி­லக்க அடை­யாள முறை­யான சிங்­பா­சில் புதிய அம்­சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதைக் கொண்டு இணை­யம் வழி சட்ட, வர்த்­தக ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­ட­லாம்.

இந்த அம்­சத்தை சிங்­கப்­பூர் நில ஆணை­யம் முத­லில் பயன்­படுத்­து­கிறது.

நிலச் சொத்து தொடர்­பான நோட்­டீஸ்­களில் இணை­யம் வழி கையெ­ழுத்­திட இது வகை செய்­கிறது.

சிங்­பாஸ் வழி­யாக ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­டும் அம்­சம் சிங்­பாஸ் கைபேசிச் செய­லி­யில் இடம்­பெ­று­கிறது.

சிங்­பா­ஸைப் பயன்­ப­டுத்­தும் 2.1 மில்­லி­யன் பேரின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளை­யும் அடை­யாள அட்­டை­யின் பட்­டைக் குறி­யீட்­டை­யும் இச்­செ­யலி கொண்­டி­ருக்­கிறது.

விரல் ரேகை, முக அடை­யா­ளம் ஆகி­ய­வற்றை திறன்­பே­சி­களில் ஸ்கேன் செய்து இணை­யம் வழி அர­சாங்க சேவை­க­ளைப் பெற இந்­தச் செயலி உத­வு­கிறது.

இதற்கு மறைச்­சொல் தேவை­யில்லை.

புதிய மின்­னி­லக்க கையெ­ழுத்து அம்­சம் மூலம் செய­லி­யைப் பயன்­படுத்தி இணை­யம் வாயி­லாக ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­ட­லாம்.

செயலி மூலம் போடப்­படும் கையெ­ழுத்து மறைக்­கு­றி­யாக்­கப்­பட்­ட­தாக இருக்­கும். கையெ­ழுத்­திட்­ட­தும் அர­சாங்­கப் பதி­வில் அது சரி­பார்க்­கப்­பட்டு கையெ­ழுத்­திட்­ட­வ­ரின் அடை­யா­ளம் உறுதி செய்­யப்­படும்.

புதிய அம்­சத்தை GovTech உரு­வாக்­கி­யுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது மெய்­நி­கர் தெரி­வு­கள் மூலம் அர­சாங்­கப் பரி­வர்த்­த­னை­களைச் செய்ய பலர் விரும்­பு­கின்­ற­னர்.

எனவே, இந்­தப் புதிய அம்­சம் சரி­யான நேரத்­தில் அறி­க­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அது கூறி­யது.

“சிங்­பாஸ் வழி­யாக ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­தி­டும் அம்­சம் வர்த்­த­கங்­க­ளின் செல­வு­க­ளைக் குறைக்­கும்.

“ஆவ­ணங்­க­ளைச் சரி­பார்க்க ஆள்­ப­லம் தேவை­யி­ருக்­காது,” என்று GovTech அமைப்­பின் தலைமை நிர்­வாகி திரு கொக் பிங் சூன் தெரி­வித்­தார்.

புதிய அம்­சத்­தைப் பயன்­ப­டுத்தி ஆவ­ணங்­களில் கையெ­ழுத்­திட முத­லில் சிங்­பாஸ் கைபேசிச் செயலி­யில் இருக்­கும் ஸ்கேன் அம்­சத்தை இயக்க வேண்­டும்.

பிறகு ஆவ­ணத்தை பட­மெ­டுக்க வேண்­டும். இதை­ய­டுத்து, தனிப்­பட்ட கியூ­ஆர் குறி­யீடு திரை­யில் காட்­டப்­படும்.

சிங்­பாஸ் கைபேசிச் செய­லி­யைப் பயன்­ப­டுத்தி அந்த கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்ய வேண்­டும். இதன்­மூ­லம் இணை­யம் வழி கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கான கோரிக்கை விடுக்­கப்­படும்.

அதே வேளை­யில் ஸ்கேன் செய்­ப­வர்­க­ளின் முக அடை­யா­ளம் அல்­லது விரல் ரேகையை சிங்­பாஸ் கைபேசிச் செயலி சரி­பார்த்து உறுதி செய்­யும்.

அதன் பிறகு இணை­யம் வழி­யாக ஆவ­ணத்­தில் கையெ­ழுத்­தி­ட­லாம்.

கையெ­ழுத்­தி­டும்­போது ஆவ­ணத்­தில் இடம்­பெற்­றுள்ள ரக­சி­யத் தர­வு­கள் சேவைத் தளத்­த­லி­ருந்து GovTech அமைப்­புக்கு இடம் மாறாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2023ஆம் ஆண்­டுக்­குள் 90லிருந்து 95 விழுக்­காடு சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் வீட்­டில் இருந்­த­படி அர­சாங்­கப் பரி­வர்த்­த­னை­களை இணை­யம் வழி செய்ய அர­சாங்­கம் இலக்கு கொண்­டுள்­ளது. இதற்கு ஏற்ப இந்­தப் புதிய திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!