வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் மேலும் 11 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிக்கும் மேலும் 11 ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே தங்குவிடுதியில் வசிக்கும் 35 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கு கடந்த திங்கட்கிழமை தொற்று உறுதியாகி இருந்தது. அவர் இருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அந்த தங்குவிடுதியில் கிருமிப் பரவல் உறுதியாகியுள்ளதை அடுத்து அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தனிமைப்படுத்தும் வசிப்பிடத்திற்கு மாற்றப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

Remote video URL

கிருமி தொற்றிய அந்த பங்ளாதேஷ் ஊழியருடன் தங்குவிடுதியிலும் அவரது வேலையிடத்திலும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அந்த ஊழியருடன் ஒரே அறையில் வசிக்கும் மற்றொருவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களில் அவரும் அடங்குவார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் விடுதியில் வசிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஏற்கெனவே கிருமித்தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்த 10 ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது.

கிருமி தொற்றிய அந்த ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த விடுதியில் ஊழியர்களிடம் கிருமி தொற்றிய சம்பவம் குறித்த மேல்விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

இதன் தொடர்பில் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் விடுதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், நேற்று (ஏப்ரல் 21) காலை 9 மணி நிலவரப்படி அந்த 11 ஊழியர்களுக்குத் தொற்று உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விடுதியின் புளோக் ‘ஏ’வில் இரண்டாவது முதல் ஏழாம் தளங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) 568 கிருமித்தொற்று மற்றும் ‘செராலஜி’ பரிசோதனைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களில் சிலருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அந்த பங்ளாதேஷ் ஊழியரும் அவ்விடுதியின் அதே புளோக்கில் வசித்தார்.

அந்த புளோக்கில் வசிக்கும் ஊழியர்கள் இன்று (ஏப்ரல் 22) அரசாங்க தனிமைப்படுத்தும் வசிப்பிடத்திற்கு மாற்றப்படுவர் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!