200,000ஐ நெருங்கும் உயிரிழப்பு

இந்தியா: ராணுவத்திடம் உதவிகேட்பு; வளங்களைத் திரட்டி ஆதரவு வழங்க உலகளாவிய பணிக்குழு

இந்­தி­யா­வில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக மரணமடைந்தோர் எண்­ணிக்கை இன்று இருநூறு ஆயிரத்தை எட்­டி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொடர்ந்து கடந்த ஆறு நாள்­க­ளாக அங்கு நாளொன்­றுக்கு ஈராயிரத்திற்கும் மேற்­பட்­டோர் கொரோனா தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர்.

கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 323,144 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது; 2,771 பேர் மாண்டு ­விட்­ட­னர். இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 17,636,307ஆக­வும் மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 197,894ஆக­வும் அதி­க­ரித்­தது. குறிப்­பாக, இம்­மா­தத்­தில் மட்­டும் கிட்­டத்­தட்ட 34,000 பேர் கிரு­மித்­தொற்­றால் இறந்­து­விட்­ட­னர்.

மகா­ராஷ்­டிரா, உத்­த­ரப் பிர­தே­சம், கர்­நா­டகா, கேரளா, டெல்லி ஆகிய ஐந்து மாநி­லங்­களில் அதிக பாதிப்­பு­கள் பதி­வா­கி­யுள்­ளன.

முந்­திய நாளைக் காட்­டி­லும் குறை­வான பாதிப்பு பதி­வா­கியுள்ள ­போ­தும் கிரு­மித்­தொற்று இனி இறங்­கு­மு­கத்­தில் இருக்­கும் எனக் கரு­தி­வி­ட­லா­காது என்று நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

பேர­ழிவை ஏற்­ப­டுத்தி வரும் கொரோனா நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க ராணு­வத்­தின் உதவி கோரப்­பட்­டுள்­ளது. ராணு­வத்­தி­டம் கையி­ருப்­பில் உள்ள ஆக்­சி­ஜன் விடு­விக்­கப்­படும் என்­றும் ஓய்­வு­பெற்ற ராணுவ மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் சுகா­தா­ரப் பணி­களுக்­குத் திரும்­பு­வர் என்­றும் ராணு­வத் தள­பதி ஜென­ரல் பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

இந்த இக்­கட்­டான தரு­ணத்­தில் இந்­தி­யா­விற்கு உத­விக்­க­ரம் நீட்­டும் வகை­யில், வளங்­களை ஒன்­று­தி­ரட்­டு­வ­தற்­காக ஓர் உல­க­ளா­விய பணிக்­கு­ழுவை உரு­வாக்க அமெ­ரிக்­கா­வின் முன்­னணி 40 நிறு­வ­னங்­க­ளின் தலைமை நிர்­வாகி­கள் ஒன்­றி­ணைந்துள்­ள­னர்.

அத்­து­டன், இந்­தி­யா­விற்­குச் சாத்­தி­ய­முள்ள அனைத்து உதவி­க­ளை­யும் வழங்க வேண்­டும் என்று அமெ­ரிக்க அர­சுக்கு அந்­நாட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இத­னி­டையே, கொரோனா நில­வ­ரம் தொடர்­பில் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று முன்­தி­னம் மாலை­யில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னு­டன் தொலை­பேசி வழி­யாக உரை­யா­டி­னார். முன்­ன­தாக, அமெ­ரிக்கா 318 ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­களை நேற்று முன்­தி­னம் இந்­தி­யா­விற்கு அனுப்பி வைத்­தது.

அமெ­ரிக்­கா­வின் 'கிலி­யட் சயின்­சஸ்' நிறு­வ­னம் குறைந்­தது 450,000 'ரெம்­டெ­சி­விர்' தடுப்­பூசி மருந்­துக் குப்­பி­களை இந்­தி­யா­விற்கு அனுப்­ப­வி­ருப்­ப­தா­க­வும் அந்­நாட்­டில் அம்­ம­ருந்து தயா­ரிப்பை ஊக்­கு­விக்க இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்­தி­யா­வில் இருந்து நேரடி பய­ணி­கள் விமா­னங்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லியா தடை விதித்து இருக்­கிறது.

அதே­போல, இன்று முதல் இந்­தியா-மலே­சியா இடை­யி­லான விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் மலே­சியா தற்­கா­லி­க­மா­கத் தடை விதித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!