சமூகத்தில் 16 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு கிருமித்தொற்று

சமூக அளவில் 16 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 29) புதிதாக 35 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமுகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த 16 பேரில் எட்டுப் பேர், டான் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் தாதியுடன் தொடர்புடையவர்கள். அந்தத் தாதிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக நேற்று (ஏப்ரல் 28) அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தாதி பணிபுரியும் பாதிக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவில் (ward) தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சுகாதார அமைச்சு நடத்திய பரிசோதனையில் அந்த எட்டுப் பேருக்குத் தொற்று உறுதியாகியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் பணியமர்த்தப்பட்ட குடிநுழைவுச் சோதனைச் சாவடி அதிகாரியின் குடும்ப உறுப்பினர் ஏழுப் பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 38 வயது சிங்கப்பூரரான அந்த அதிகாரிக்குத் தொற்று உறுதியானதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 19 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!