நாளை மறுநாள் முதல் மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கற்கும் நடைமுறை

சமூ­கத்­தில் கொவிட்-19 பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தன் எதி­ரொ­லி­யாக, நாளை மறு­நாள் 19ஆம் தேதி புதன்­கி­ழ­மை­யில் இருந்து இம்­மா­தம் 28ஆம் தேதி வரை அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் வீட்­டி­லி­ருந்­த­படி கற்­கும் நடை­முறை இடம்­பெ­றும்.

அனைத்து தொடக்க, உயர்­நிலைப் பள்­ளி­க­ளுக்­கும் தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளுக்­கும் மில்­லெ­னியா கல்வி நிலை­யத்­திற்­கும் சிறப்­புக் கல்வி பள்­ளி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

கடும் பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­க­ளு­டன் அரை­யாண்டு ஜிசிஇ 'ஓ' மற்­றும் 'ஏ' நிலை தாய்­மொ­ழிப் பாடத் தேர்­வு­கள் திட்­ட­மிட்­ட­படி இடம்­பெ­றும் என்று கல்வி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை வாயி­லா­கத் தெரி­வித்­துள்­ளது.

வீட்­டி­லி­ருந்­த­படி கற்­கும் நடை­முறை இடம்­பெ­றும் கால­கட்­டத்­தின்­போது கற்­றல் நட­வ­டிக்­கை­கள் இடை­யூ­றின்­றித் தொடர ஏது­வாக, மாண­வர்­கள் இணை­யம் வழி­யா­க­வும் கைப்­பி­ர­தி­க­ளைக் கொண்­டும் படிக்­கும் வகை­யில் பள்­ளி­கள் ஆத­ர­வை­யும் அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் வழங்க வேண்­டும்.

மின்­னி­லக்­கக் கருவி­கள் அல்­லது இணைய வசதி தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்­கும் பள்­ளி­கள் உதவ வேண்­டும்.

"கூடு­தல் ஆத­ரவு தேவைப்­படும் மாண­வர்­க­ளுக்­கா­கப் பள்­ளி­கள் திறந்­தி­ருக்­கும். குறிப்­பாக, அத்­தி­யா­வ­சிய சேவை­களில் பணி­யாற்­றும் அல்­லது மாற்­றுப் பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்ய முடி­யாத பெற்­றோர்­கள், உத­விக்­காக தங்­கள் பிள்­ளை­கள் படிக்­கும் தொடக்­கப் பள்­ளி­களை அணு­க­லாம்," என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சாத்தியப்பட்டால் உயர்­கல்வி நிலை­யங்­கள் ஜூன் 13ஆம் தேதி வரை அதி­க­மான வகுப்­பு­களை இணை­யம் வழி­யா­கக் கற்­கும்­படி மாற்ற வேண்­டும்.

ஆய்­வக, செய்­முறை வகுப்­பு­கள், இறு­தி­யாண்டு ஒப்­ப­டைப்­பு­கள் போன்ற நேரில் கற்க வேண்­டிய அவ­சி­ய­முள்ள வகுப்­பு­களுக்கு விதி­வி­லக்கு அளிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று சமூ­கத்­தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அதில் 18 பேர், ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் இப்­போ­தைக்கு எவ்­வி­தத் தொடர்­பும் இல்­லா­த­வர்­கள்.

பள்ளி விடு­மு­றையை முன்­கூட்­டியே கொண்டு வரா­மல் வீட்­டி­ல் இ­ருந்­த­படி கற்­கும் நடை­மு­றையை அமல்­ப­டுத்­து­வது ஏன் எனக் கேட்­ட­தற்கு, வீடு­க­ளுக்கு வெளியே முடிந்த அளவு நட­வ­டிக்­கை­க­ளைக் குறைத்­துக்கொள்­வதே அதன் நோக்­கம் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் விளக்­க­ம­ளித்­தார்.

அடுத்த இரு வாரங்­களில் மாண­வர்­களை அர்த்­த­முள்ள நட­வடிக்­கை­களில் ஈடு­ப­டுத்த வேண்­டும் என்று பெற்­றோர்­களும் கல்­வி­யா­ளர்­களும் கருத்­து­ரைத்­துள்­ள­தா­கத் தெரி­வித்த அமைச்­சர் சான், வீட்­டில் இருந்­த­படி கற்­கும் நடை­முறை அந்த இலக்­கின் ஒரு பகு­தியை அடை­யச் செய்­யும் என்று குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு­வின் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­ல் இருந்து ஜூன் 27ஆம் தேதி வரை பள்­ளி­க­ளுக்கு விடு­முறை.

தங்­கள் மாண­வர்­கள் சில­ருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டதை அடுத்து, முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­யாக ஏழு தொடக்­கப் பள்­ளி­கள் முன்­கூட்­டியே வீட்­டி­ல் இ­ருந்து கற்­கும் நடை­மு­றை­யைத் தொடங்­கி­விட்­டன. அந்­தப் பாதிப்பு­கள் அனைத்­தும் துணைப்­பாட நிலை­யங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை. பள்­ளி­களில் இது­வ­ரை­யிலும் எந்த ஒரு மாண­வ­ரை­யும் கொரோனா தொற்­றி­ய­தா­கத் தெரிய­வில்லை.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­களுக்கு இலே­சான அறி­கு­றி­களே காணப்­ப­டு­கின்­றன என்­றும் அவர்­களில் எவரது உடல்­நி­லை­யும் மோசமாகவில்லை என்­றும் அமைச்­சர் சான் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

இருப்­பி­னும், புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் அதி­கம் பர­வக்­கூ­டி­யவை என்­ப­தா­லும் இளம் பிள்­ளை­க­ளைத் தாக்­க­வல்­ல­தா­கத் தெரி­கிறது என்­ப­தா­லும் நிலைமை கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.

துணைப்­பாட நிலை­யங்­களும் செறி­வூட்­டல் வகுப்­பு­களும் ஜூன் 13ஆம் தேதி வரை அல்­லது அடுத்த அறி­விப்பு வெளி­யா­கும் வரை தங்­க­ளது நட­வ­டிக்­கை­களை இணை­யம் வழி­யாக இடம்­பெ­றும்­படி மாற்­றிக்­கொள்ள வேண்­டும்.

பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

வரும் வாரங்­களில் பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­களை வீட்­டி­லேயே வைத்­தி­ருக்­க ஊக்­கு­விக்­கப்­படு­கின்­ற­னர். அதே வேளை­யில், பாலர் பள்­ளி­களும் மாண­வர் பரா­மரிப்பு நிலை­யங்­களும் திறந்­தி­ருக்­கும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

"பெற்­றோர்­கள் பல­ரும் அத்­தி­யாவ­சி­யப் பணி­யா­ளர்­க­ளாக இருப்­ப­தால் அவர்­கள் வேலை செய்ய வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை அறிந்­துள்­ளோம்.

"இந்­தக் கால­கட்­டத்­தில் அவர்களுக்கு உத­வும் வகை­யில், பள்­ளி­க­ளின், குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களின் சேவை­கள் தேவைப்­படும். அத்­த­கைய சேவை­கள் தேவைப்­படும் பெற்­றோர்­களுக்­கும் குடும்­பங்­க­ளுக்­கும் உதவ எல்லா முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கி­றோம்," என்று திரு சான் கூறி­யுள்­ளார்.

பணி­யி­டங்­களில் பெரும்­பா­லும் வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்­வது புதிய இயல்­பு­நிலை­யாக இருப்­ப­தால், சாத்­தி­ய­முள்ள பட்­சத்­தில் இந்­தக் கால­கட்­டத்­தில் பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­களை வீட்­டி­லேயே வைத்­தி­ருக்கும்படி கல்வி அமைச்சு ஊக்­கு­விக்­கிறது.

அப்­படி பாலர் பள்­ளி­களில் பயி­லும் தங்­கள் பிள்­ளை­களை வீட்­டி­லேயே வைத்­தி­ருக்க முடி­யும் பெற்­றோர்­க­ளுக்­காக, பாலர் பள்ளி மானி­யங்­க­ளைப் பெறத் தேவை­யான குறைந்­த­பட்ச வரு­கைப்­ப­தி­வைத் தளர்த்த பாலர் பருவ மேம்­பாட்டு வாரியம் ஆயத்­த­மாகி வரு­வ­தாக அமைச்சு குறிப்­பிட்டு இருக்­கிறது.

அது­போல, எல்­லாப் பெற்­றோர்­களும் தங்­கள் பிள்­ளை­களை வீட்­டி­லேயே வைத்­தி­ருக்க முடி­வு­செய்­தால், இந்தக் கால­கட்­டத்­தில் குறிப்­பிட்ட நேரத்­திற்கு பாலர் பள்ளி­கள் செயல்­பாட்­டில் இருக்க வேண்­டும் என்ற தேவை­யைத் தளர்த்­த­வும் பாலர் பருவ மேம்­பாட்டு வாரியம் தயா­ராகிறது.

வீட்­டி­லி­ருந்து கற்­கும் நடை­முறை சில பெற்­றோர்­க­ளுக்கு மனக்கலக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்­பதை அறிந்­துள்­ள­தா­க­வும் திரு சான் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!