அமைச்சர் சண்முகம்: இனவாதக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது

சிங்­கப்­பூ­ரில் சீன ஆட­வர் ஒரு­வர், கலப்­பி­னத் தம்­ப­தி­யி­டம் இன­வா­தக் கருத்­து­களைக் கூறு­வ­தைக் காட்­டும் காணொளி (படம்) ஒன்று சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கிறது.

அச்­சம்­ப­வம் தொடர்­பான முழு உண்­மை­யை­யும் தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் ஆனா­லும் மற்­ற­வர்­க­ளின் முகத்­திற்கு நேராக இன­வா­தக் கருத்­து­க­ளைக் கூறு­வது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­யது எனப் பல­ரும் நினைப்­ப­தா­கத் தோன்­று­கிறது என்றும் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

அச்­சம்­ப­வம் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல என்­றும் மிக­வும் கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது என்­றும் திரு சண்­மு­கம் கூறி­ உள்­ளார்.

இன சகிப்­புத்­தன்மை, நல்­லி­ணக்­கம் என வரும்­போது சிங்­கப்­பூர் சரி­யான திசை­யில் சென்­று­கொண்டு இருந்­த­தா­கத் தாம் நம்பி வந்­த­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஆனால், அண்­மைய நிகழ்­வு­களை அடுத்து, இனி­மே­லும் அதில் தாம் 'அவ்­வளவு உறு­தி­யாக இருக்க முடியாதுபோல் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

ஐந்து நிமி­டங்­க­ளுக்கு மேல் நீடிக்­கும் அக்­கா­ணொ­ளியை டேவ் பர்­காஷ், 23, எனும் ஃபேஸ்புக் பய­னா­ளர் பகிர்ந்­து கொண்டார்.

அக்­கா­ணொ­ளி­யில், சிங்­கப்­பூ­ர­ரான அந்த சீன ஆட­வர், "சீனப் பெண் ஒரு­வரை வேட்­டை­யா­டி­ய­தாக" திரு பர்­காஷ் மீது குறை­கூ­றி­னார். அக்காணொ­ளியை திரு பர்­கா­ஷின் காதலி எடுத்­த­தா­கத் தெரி­கிறது.

இந்­திய ஆட­வர் ஒரு­வ­ரு­டன் சீனப் பெண் ஒரு­வர் இருக்­கக்­கூ­டாது என்­றும் அந்­தச் சீன ஆட­வர் கூறி­னார்.

தாம் இந்­திய-பிலிப்­பினோ கலப்­பி­னத்­தவர் என்­றும் அது­போல் தம் காதலி பாதி சிங்­கப்­பூர் சீனர், பாதி தாய்­லாந்து இனத்­த­வர் என்­றும் திரு பர்­காஷ் அந்த ஆட­வ­ரி­டம் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

சம்­ப­வம் தொடர்­பில் நேற்­றுக் காலை திரு பர்­காஷ் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில், "நாங்­கள் இரு­வ­ரும் கலப்­பி­னத்­தவர்­கள். ஆனால், சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருப்­ப­தில் பெரு­மை­கொள்­கி­றோம்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

'ஒரே இனத்­தைச் சேர்ந்­த­வர்­களை மட்­டுமே காத­லிக்க வேண்­டும்' என்று அந்த ஆட­வர் தங்­க­ளி­டம் சொன்­ன­தாக திரு பர்­காஷ் கூறி­னார்.

"அந்த ஆட­வர் என்னை ஓர் இன­வாதி என்று அழைத்­தார். நாங்­கள் வேறு இனத்­த­வர்­கள் என்ற ஒரே கார­ணத்­திற்­காக எங்­களை இன­வாதி என்று அவர் குறை­கூ­றி­னார்," என்­றார் திரு பர்­காஷ்.

"காத­லுக்கு இனம் இல்லை, சம­ய­மும் இல்லை. நீங்­களும் நானும் யாரைக் காத­லிக்க விரும்­பு­கி­றோமோ அவ­ரைக் காத­லிக்க முடிய வேண்­டும். காணொ­ளி­யில் உள்ள இந்த ஆட­வ­ரைப் போன்று நாம் ஆகி­விடக்­கூ­டாது.

"இந்­தக் காணொ­ளியை அந்த ஆட­வர் காண நேரிட்­டால், அவர் ஓர் இன­வா­தி­யாக இருப்­பதை நிறுத்­திக்­கொள்­ளக் கற்­றுக்­கொண்டு, நம் அனை­வ­ரை­யும் நல்­லி­ணக்­கத்­து­டன் வாழ­வி­டு­வார் என நம்­பு­கி­றேன்," என்­றும் திரு பர்­காஷ் தமது பதி­வில் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!