இந்தியரின் கடப்பிதழில் தடுப்பூசிச் சான்றிதழை இணைக்க முடிவு

இந்­தி­யா­வில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு 'கோவின்' என்­னும் பெய­ரில் அர­சாங்­கம் சான்­றி­தழ் வழங்­கு­கிறது. அனைத்­து­ல­கப் பய­ணங்­களை மேற்­கொள்­வோ­ரின் கடப்­பி­த­ழு­டன் இந்­தச் சான்­றி­தழ் இணைக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

கிரு­மித்­தொற்று பர­வல் காலத்­தின்­போது அனைத்­து­ல­கப் பய­ணத்­திற்­கான ஏற்­பா­டு­களில் பெரும் சிக்­கலை எதிர்­நோக்­கு­ம் பல்­வேறு தரப்­பி­னர் தெரிவித்த கருத்­து­களை ஆராய்ந்த பின்­னர் அர­சாங்­கம் இம்­மு­டிவை எடுத்­துள்­ள­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' இணை­யத்­த­ளம் குறிப்­பிட்டுள்­ளது. மேலும் இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அர­சாங்­கக் குழுக்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­தது.

இந்த ஆலோ­ச­னைக்­குப் பின்­னர் வரை­யப்­பட்ட பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி தொடர்­பான புதிய வழி­காட்டி நெறி­மு­றை­களை சுகா­தார அமைச்சு திங்­கட்­கி­ழமை மாலை அறி­வித்­தது.

படிப்பு, வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்­றுக்­காக வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­ளும் கட்­டா­யத்­தில் இருப்­போர், தோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டி­களில் பங்­கேற்­கும் இந்­திய அணி­யி­னர் போன்­றோ­ரின் கடப்­பி­த­ழு­டன் 'கோவின்' தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் இணைக்­கப்­படும் என்று அப்­போது தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன், இவர்­களில் ஏற்­கெ­னவே ஒரு முறை தடுப்­பூசி போட்டு இரண்­டா­வது தடுப்­பூ­சிக்­காக 84 நாட்­கள் காத்­தி­ருப்­பில் இருப்­போ­ரின் பயண தேதி இந்த காலக்­

கெ­டு­வுக்­குள் இருப்­பின் அவர்­க­ளுக்கு இரண்­டா­வது தடுப்­பூ­சியை 28 நாட்­க­ளுக்­குப் பின்­னர் போட­வு­டம் முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.

இவ்­வாறு விதி­வி­லக்கு பெற்­றோ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தில் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தைக் கவ­னிக்க ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் உரிய அதி­கா­ரியை எல்லா மாநி­லங் கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களும் நிய­மிக்­க­லாம் என்று சுகா­தார அமைச்சு அற­வித்­துள்­ளது.

புதிய முடி­வுக்கு ஏற்ற வகை­யில் 'கோவின்' பதி­வு­மு­றை­யில் இரண்­டா­வது தடுப்­பூ­சிக்­கான மாற்­றத்தை அர­சாங்­கம் விரை­வில் செய்­யும் என்­றும் அது கூறி­யது.

மேலும் தடுப்­பூசி சான்­றி­த­ழில் கோவிஷீல்டு தடுப்­பூசி என்று குறிப்­பிட ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ள­தால் மற்­றொரு தடுப்­பூ­சி­யான கோவேக்­சின் போட்­டுக்கொண்­ட­வர்­கள் கவ­லை­ அடைந்து உள்­ள­தா­க­வும் 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' குறிப்­பி­டு­கிறது. குறிப்­பாக, ஒன்று அல்­லது இரண்டு முறை கோவேக்­சின் தடுப்­பூ­சியை ஏற்­கெ­னவே போட்­டுக்­கொண்ட பின்­னர், தற்­போது படிப்பு, வேலை தொடர்­பாக அனைத்­து­ல­கப் பய­ணம் மேற்­கொள்­ளும் கட்­டா­யத்­தில் இருப்­போ­ரி­டையே கவலை எழுந்­துள்­ள­தாக அச்­செய்தி தெரி­வித்­தது.

கோவேக்­சின் தடுப்பூசி தொடர்­பான பயண நெறி­மு­றை­கள் எது­வும் அர­சாங்­கத்­தால் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. மேலும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அங்­கீ­கா­ரத்­தை­யும் இந்­தத் தடுப்­பூசி இது­வரை பெற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கிடையே, கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசிக்கே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப் பதாக பரிசோதனை முடிவுகள் தெரி வித்துள்ளன.

இதற்காக 13 மாநிலங்களில் 515 சுகாதார ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்களில் 425 பேர் கோவிஷீல்டும் 90 பேர் கோ வேக்சினும் இருமுறை போட்டுக் கொண்டவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!