திடீர் மரண அதிகரிப்புக்கு டெல்டா கிருமி காரணம்

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடும் திட்­டம் சிறப்­பான, துரி­த­மான முறை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் தலைக்கு வந்­தது தலைப்­பா­கை­யு­டன் போனது என்று கூறு­வது போல மரண எண்­ணிக்கை கட்­டுக்­க­டங்­­கா­மல் போகும் நிலை தவிர்க்­கப்­பட்­ட­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தம் மட்­டும் பத்து பேர் மாண்­டு­விட்­ட­னர். கிட்­டத்­தட்ட நான்­கில் மூன்று பேர்

முழு­மை­யா­கத் தடுப்­பூசி

போட்­டுள்­ள­போ­தி­லும் இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று முதன்­மு­த­லா­கத் தலை­தூக்­கி­ய­தி­லி­ருந்து கடந்த ஜூலை மாதம் வரை அந்­நோயின் கார­ண­மாக 37 பேர் மாண்­ட­னர்.

அந்­தக் கால­கட்­டத்­தில் 64,000க்கும் மேற்­பட்­டோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 மர­ணங்­கள் திடீ­ரென அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு டெல்டா கிருமி வகை­தான் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமூக அள­வில் இவ்­வகை கிருமி பரவி வரு­கிறது. சாதா­ரண கொவிட்-19 கிரு­மி­யை­விட இந்த உரு­மாற்­றம் கண்ட டெல்டா கிருமி வகை இரண்­டி­லி­ருந்து நான்கு மடங்கு வேக­மா­க­வும் எளி­தா­க­வும் பர­வக்­கூ­டி­யது என்று சுகா­தா­ரத் துறை நிபு­ணர்­கள்

எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

டெல்டா கிருமி வகை­யால் பாதிக்­கப்­பட்­டோர், கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­கும் அபா­யம் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது, சாதா­ரண கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரா­கப் பாது­காப்பு தரும் அள­வுக்கு டெல்டா கிருமி வகைக்கு எதி­ராக தடுப்­பூ­சி­க­ளால் பாது­காப்பு தர­ மு­டி­ய­வில்லை.

இருப்­பி­னும், டெல்டா கிருமி வகைக்கு எதி­ரா­கக் கணி­ச­மான அள­வுக்கு தடுப்­பூ­சி­க­ளால் பாது­காப்பு கொடுக்க முடி­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மரணம் ஏற்படும் அபாயத்தை அதனால் வெகுவாகக் குறைக்க முடிவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஈரச்­சந்தை போன்ற மூத்­தோர் அதி­கம் செல்­லும் இடங்­களில் சமூக அள­வில் கிருமி பர­வி­ய­தால் அண்­மை­யில் கொவிட்-19 மர­ணங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­

க­ழ­கத்­தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் கூறி­னார். கொவிட்-19 கார­ண­மாக உயி­ரிழந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­றும் மாண்ட முதி­ய­வர் ஒரு­வர் மட்­டும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என்­றும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ ம­னை­யின் மூத்த தொற்­று­நோய் எதிர்ப்பு ஆலோ­ச­க­ரான பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போடும் திட்­டம் முழு­வீச்­சு­டன் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் டெல்டா கிருமி வகை பர­வி­

இருந்­தால் நிலைமை நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­வுக்கு மோச­மா­கி­யி­ருக்­கும் என்றும்

ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் மடிந்­

தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக் தெரி­வித்­தார்.

பலர் தடுப்­பூசி போடா­மல் இருந்­தி­ருந்­தால் மேலும் பல மூத்­தோ­ரும் ஏற்­கெ­னவே மற்ற நோய்

களால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களும் உயி­ரி­ழந்­தி­ருப்­பர் என்று மருத்­து­வப் பயிற்­சிக் கழ­கத்­தின் தொற்­று­நோய் எதிர்ப்பு மருத்­து­வர்­க­ளுக்­கான பிரி­வின் தலை­வர் டாக்­டர் அஷோக் குரூப் தெரி­வித்­தார்.

சிறி­த­ளவு மெத்­த­னத்­து­டன் இருந்­தால் போதும், டெல்டா கிருமி வகை மள­ம­ள­வென

பர­வி­வி­டும் என்­றார் அவர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரும் போட்­டுக்­கொள்­ளா­தோ­ரும் டெல்டா கிருமி வகை­யால் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­றார் அவர்.

இருப்­பி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கடு­மை­யான பாதிப்­புக்கு உள்­ளா­கும் சாத்­தி­யம் குறைவு என்று அவர் தெரி­வித்­தார். டெல்டா கிருமி வகை­யால் பாதிக்­கப்­பட்டு தேசிய தொற்­று­நோய் எதிர்ப்பு நிலை­யம் அல்­லது சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் பொது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்ட்ட 218 பேரி­டம் கடந்த ஏப்­ரல் மாதத்­துக்­கும் ஜூலை மாதத்­துக்­குள் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

அதற்கு தேசிய தொற்­று­நோய் எதிர்ப்பு நிலை­யத்­தின் சிங்­கப்­பூர் தொற்­று­நோய் ஆய்­வுக் கட்­ட­மைப்­பின் தலை­வர் டாக்­டர் பார்­னபி யங் தலை­மை­தாங்­கி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண் டோரின் சரா­சரி வயது 56 என்­றும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ரின் சரா­சரி வயது 39.5 என்­றும் ஆய்­வில் தெரி­ய­வந்­தது

குறைந்த வயது என்­ற­போ­தி­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களில் 26.2 விழுக்­காட்­டி­ன­ருக்கு உயிர்­வாயு சுவா­சக் கருவி அல்­லது தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை தேவைப்­பட்­ட­தாக ஆய்வு தெரி­வித்­தது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரில் 2.8 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே இந்த நிலை ஏற்­பட்­டது.

இம்­மா­தத்­தில் மட்­டும் கொவிட்-19 கார­ண­மாக பத்து பேர் மாண்­ட­போ­தி­லும் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­க­ளுக்­கான திட்­டத்தை சிங்­கப்­பூர் தொடர்­கிறது.

பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் அதி­க­மாக இருப்­ப­தால் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­லாம் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அடுத்த மாதத்­துக்­குள் சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் 82 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருப்­பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!