மலேசிய அரசாங்கம்-எதிர்க்கட்சிகள் உடன்பாடு

மலே­சிய அர­சாங்­க­மும் எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­யான பக்­கத்­தான் ஹரப்­பா­னும் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பைச் செய்­து­கொண்­டுள்­ளன.

அந்­தப் புரிந்­து­ணர்­வுக் குறிப்பு, நாட்­டில் அர­சி­யல் நிலைத்­தன்­மை­யை­யும் பொரு­ளி­யல் மீட்­சித்­தன்­மை­யை­யும் உறு­திப்­ப­டுத்­தும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

புதிய பிர­த­ம­ராக இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் பொறுப்­பேற்ற பிறகு மலே­சிய நாடா­ளு­மன்­றம் நேற்று முதன்­மு­றை­யா­கக் கூடி­யது. அதன்­பின், மாலை 5 மணிக்கு நடந்த நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் இஸ்­மா­யி­லும் எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹி­மும் புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

நிர்­வா­கச் சீர­மைப்பு, நாடா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ர­ம­ளித்­தல், நீதித்­து­றைச் சுதந்­தி­ரத்தை வலுப்­படுத்­து­தல் உள்­ளிட்ட ஆறு முக்­கிய துறை­களை அந்த உடன்­பாடு உள்ளடக்­கி­யி­ருப்­ப­தாக பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­திற்­குள் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கக்­கூ­டாது என்­றும் உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

‘எதிர்காலத்தோடு விளையாடாதீர்’

இத­னி­டையே, சுய­ந­ல­னுக்­காக நாட்­டின் எதிர்­கா­லத்­திற்கு ஊறு விளை­வித்­து­வி­டா­தீர்­கள் என்று மாமன்­னர் அப்­துல்லா அக­மது ஷா, எம்.பி.க்­களுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

“சுய­ந­ல­னுக்­காக நாட்­டின் எதிர்­கா­லத்­து­ட­னும் நாட்டு மக்­க­ளு­ட­னும் விளையாட வேண்­டாம் என்­பதே என் ­அ­றி­வுரை,” என்று, இவ்­வாண்­டிற்­கான மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தின் முதல் அமர்வை நேற்று தொடங்­கி­வைத்துப் பேசி­ய­போது மாமன்­னர் சொன்­னார். அதை­வி­டுத்து, கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான போராட்­டத்­தில் எம்.பி.க்கள் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

2019ல் தாம் அரி­யணை ஏறிய பிறகு அர­சி­யல் பூசல்­கள் கார­ண­மாக இரு பிர­த­மர்­கள் பதவி விலகி­விட்டதை மாமன்­னர் சுட்டினார்.

அண்­மை­யில் அம்னோ கட்சி எம்.பி.க்கள் பலர் ஆத­ரவை விலக்­கிக்­கொண்­ட­தை­ய­டுத்து, முகை­தீன் யாசின் தலை­மை­யி­லான அர­சாங்­கம் கவிழ்ந்­தது.

கொரோனா தொற்­றுக்­கெ­தி­ராக நாடு இன்­னும் போராடி வரு­வ­தா­க­வும் ஏரா­ள­மா­னோர் வரு­மா­னத்தை இழந்து, சிர­மப்­பட்டு வரு­வ­தா­க­வும் மாமன்­னர் குறிப்பிட்டார்.

“பொது­மக்­க­ளி­டம் இருந்து துய­ரம் மிகுந்த நூற்­றுக்­க­ணக்­கான கடி­தங்­களும் தங்­க­ளின் இயல்பு வாழ்க்­கை­யைத் தொட­ரும் வகை­யில் மாற்­றம் வரும் என்ற நம்­பிக்­கை­யு­டன் ஆயி­ரக்­க­ணக்­கான கடி­தங்­களும் எனக்கு வந்­துள்­ளன,” என்­றார் அவர்.

புதிய அர­சாங்­கமும் எதிர்க்­கட்சி­க­ளு­ம் செய்­து­கொண்ட இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தத்தை மாமன்­னர் வர­வேற்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!