சினோவேக் பாதிப்பு: 90 புகார்கள் கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு பற்றி சுகாதார அறிவியல் ஆணையம் தகவல்

கொவிட்-19க்கு எதி­ராக சினோ­வேக் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தால் பாதக விளை­வு­கள் ஏற்­பட்­ட­தா­கச் சந்தேகித்து 90 பேர் அதுபற்றி தெரிவித்­த­தாக அதி­கா­ரி­கள் நேற்று குறிப்­பிட்­ட­னர்.

அந்த ஊசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் ஐவ­ருக்கு கடு­மை­யான பாதிப்­பு­ஏற்­பட்­ட­தா­க­ தெரி­விக்­கப்­பட்­ட­தாகவும் அவர்­கள் கூறி­னர். ஆகஸ்ட் 31 நில­வரப்­படி 168,439 சினோ­வேக் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு இருந்­தன. இதைக் கணக்­கிட்டுப் பார்க்­கும்­போது பாதிப்­பு­கள் ஏற்­பட்­ட­தாகச் சந்­தே­கிக்­கப்­படும் விகி­தாச்­சா­ரம் 0.053% ஆக இருக்­கிறது.

கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­ட­தாக கூறு­ப­வர்­க­ளின் விகிதம் 0.003% ஆக உள்­ளது. சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நேற்று கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் பாது­காப்பு தொடர்­பான புதிய விவ­ரங்­களை வெளி­யிட்­டது.

தேசிய தடுப்­பூசி செயல்­திட்­டத்­தின்­கீழ், ஆகஸ்ட் 31 நில­வ­ரப்படி, 8,716,085 ஃபைசர்-பையோ­என்­டெக், மொடர்னா தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு இருக்­கின்­றன என்று அந்த விவ­ரங்­கள் தெரி­வித்­தன.

தேசிய தடுப்­பூசி செயல்­திட்­டத்­தில் இடம்­பெ­றும் இந்­தத் தடுப்­பூ­சி­க­ளை­ப் போட்­டுக்­கொண்­டோ­ரில் மொத்­தம் 11,737 பேருக்கு, அதா­வது 0.13%க்கு பாதக விளை­வு­கள் ஏற்­பட்டு இருப்­ப­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­வோ­ரில் 498 பேர் (0.006%) கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக வகைப்படுத்­தப்­பட்டு உள்­ளனர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு பொது­வாக ஏற்­ப­டக்­கூ­டிய பாதக அறி­கு­றி­களே அவர்­க­ளி­டத்­தில் ஏற்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

மயக்­கம், மூச்­சு­விட சிர­மம், மார்பு இறுக்­க­மா­வது போன்ற உணர்வு அல்லது சங்­க­டம், இத­யத் துடிப்பு, தடுப்­பூசி போட்ட இடத்­தில் வீக்­கம், வலி, ஒவ்­வாமை அறி­கு­றி­கள் போன்­றவை இவற்­றில் அடங்­கும். இந்­த பாதிப்­பு­கள் பொது­வாக ஓரிரு நாட்­களில் அகன்­று­வி­டும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

கடு­மை­யான பாதிப்­பு­க­ளைப் பொறுத்­த­வரை ஒவ்­வா­மையே முக்­கி­ய­மான ஒன்­றா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஃபைசர் பயோ­என்­டெக், மொடர்னா தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­களில் இத­யத் தசை­கள் அழற்சி அடையும் நிலை மிக­மிக அரி­தாக ஏற்­ப­டு­கிறது என்­பது வெளி­நா­டு­க­ளி­லும் இங்­கே­யும் தெரி­ய­வந்­துள்­ளது.

மார­டைப்பு, பக்­க­வா­தம் போன்­றவை ஏற்­ப­டு­வ­தற்­கும் தடுப்­பூ­சிக்­கும் தொடர்­பில்லை என்­பது முக்­கி­ய­மா­ன ஒன்று என ஆணை­யம் சுட்­டி­யது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் சில­ருக்கு முகத்­த­சை­கள் பல­வீ­ன­ம­டை­யும் ஒரு பாதிப்­பும் தெரி­ய­வந்­துள்­ளது.

பொது­வாக இந்­த பாதிப்­பில் இருந்து சிகிச்சை இல்­லா­ம­லேயே முற்­றி­லும் குண­ம­டைந்­து­வி­ட­லாம் என்­ப­தை­யும் அது சுட்­டி­யது.

மொத்­தமாகப் பார்க்­கை­யில், பைசர்-பயோ­என்­டெக், மொடர்னா தடுப்­பூ­சி­களால் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­கள், அவற்றால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளை­விட மிக அதி­க­மாக இருக்­கின்­றன என்­பதை ஆணை­யம் சுட்­டிக்­காட்­டி­யது.

கொவிட்-19 தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு விளை­வு­களை இந்த ஆணை­யம் தொடர்ந்து தீவி­ர­மாகக் கண்­கா­ணித்து வரும். பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­தைப் பாது­காக்க ஏற்­பு­டைய ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கை­க­ளை­ ஆணை­யம் எடுக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!