ஜனவரி 1 முதல், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டும் வேலையிடம் திரும்பலாம்

அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

கடந்த 270 நாட்களில் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களும் அலுவலகம் திரும்ப முடியும்.

ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கொவிட்-19 பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ என்பதை உறுதிப்படுத்திய பிறகே வேலையிடங்களுக்குச் செல்ல முடியும். ‘ஏஆர்டி’ பரிசோதனைக்கான கட்டணங்களை அவர்கள் ஏற்க வேண்டும்.

இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சிங்கப்பூர் ஊழியரணியில் 96 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

தற்போது, ஏறத்தாழ 113,000 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மேலானவர்கள் மூத்த குடிமக்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!