ஆசியான், 3 நாடுகள் ஒத்துழைப்பு தொடர பிரதமர் லீ வலியுறுத்து

சவால் மிகுந்த காலத்­திற்­கி­டை­

யி­லும் சீனா, தென்­கொ­ரியா, ஜப்­பான் ஆகிய நாடு­களும் ஆசி­யான் உறுப்பு நாடு­களும் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வ­தைத் தொடரவேண்­டும் என்று சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

24வது 'ஆசி­யான் பிளஸ் த்ரீ' மாநாட்­டில் கலந்­து­கொண்டு திரு லீ உரை­யாற்­றி­னார். இந்த மாநாடு நேற்று மெய் நிகர் வாயி­லாக நடை­பெற்­றது.

"சவால் மிகுந்த இந்த கால­கட்­டம் 'ஆசி­யான் பிளஸ் த்ரீ' நாடு­கள் வட்­டார ஒத்­து­ழைப்பை வலுப்

­ப­டுத்­து­வது மற்­றும் நெருக்­க­டி­களை ஒன்­றாக இணைந்து சமா­ளிப்­பது போன்­ற­வற்­றுக்­கான திறன்­களை நிரூ­பிக்­கும் நிலையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"இச்சவால்­களை நாம் ஏற்­றுக்­கொள்­வ­தோடு நமது வருங்­கா­லப் பங்­கா­ளித்­து­வத்­துக்­கான வாய்ப்­பு­க­ளாக இவற்றை எடுத்­துக்கொள்ள வேண்­டும்," என்­றார் திரு லீ.

இதற்­கி­டையே தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்கு கூடு­த­லாக குறைந்­த­பட்­சம் 10 மில்­லி­யன் கொவிட்-19 தடுப்­பூ­சி­களை வழங்க இருப்­ப­தாக ஆஸ்­தி­ரே­லியா நேற்று தெரி­வித்­தது.

மேலும் 124 மில்­லி­யன் ஆஸ்­தி­ரே­லிய டாலர் (S$126 மில்­லி­யன்) நிதி உத­வியை தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்கு வழங்க இருப்­ப­தா­க­வும் அது கூறி­யது.

மெய்­நி­கர் வாயி­லாக நடத்­தப்­பட்ட ஆசி­யான் மாநாட்­டில் பங்­கேற்­றுப் பேசிய ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் இவற்­றைத் தெரி­வித்­தார்.

மேலும் பத்து உறுப்பு நாடு­க­ளு­ட­னான விரி­வான உத்­தி­பூர்­வப் பங்­கா­ளித்­துவ யோச­னை­க­ளை­யும் அவர் தமது உரை­யில் வலி­யு­றுத்­தி­னார்.

"இந்தோ-பசிஃ­பிக் வட்­டா­ரத்­தின் மைய­மாக ஆசி­யான் உள்­ளது. இதற்­கான ஆத­ரவை நாங்­கள் வாக்­கு­று­தி­யா­கத் தெரி­விப்­ப­தோடு செய­லி­லும் காட்­டு­வோம்," என்று திரு மோரி­சன் ஆசி­யான் தலை­வர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

ஆசிய பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் சீனா­வின் ஆதிக்­கம் மற்­றும் நட­

வ­டிக்­கை­கள் தொடர்­பான கவ­லை­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில் ஆசி­யா­னு­டன் உறவை வலுப்­ப­டுத்­தும் வித­மாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் அறி­விப்பு அமைந்­துள்­ளது.

"விரி­வான உத்­தி­பூர்­வப் பங்­கா­ளித்­து­வம் என்­பது வெறும் வார்த்தை அல்ல. உற­வு­களை வலுப்­ப­டுத்­தும் சாத­க­மான யோச­னை­யாக இதனை ஆசி­யான் தலை­வர்­கள் கரு­த­வேண்­டும்," என்றார் திரு மோரிசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!