'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டுகள் பயன்பாடு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு

'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டுகள் பயன்பாடு அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிப்பு

1 mins read
ff164293-ca7c-413d-8ad1-553f7ca13dbd
-

சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான 'சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்' பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை சிங்கப்பூரர்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அவற்றுக்கான முன்பதிவுகளைச் செய்துவிட வேண்டும்.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த இந்த ஏற்பாடு சிங்கப்பூரர்களுக்கு அவகாசம் வழங்கும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமை (நவம்பர் 22) தெரிவித்தது.

"ஒன்றுகூடல் எண்ணிக்கை, சுற்றுலாத் தலங்களில் கொள்ளளவு குறைக்கப்பட்டதால், சிங்கப்பூரர்கள் சிலரால் அவர்களது பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியாமல் இருக்கலாம் என்பது எங்களுக்குப் புரிகிறது," என்று ஆணையம் குறிப்பிட்டது.

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிங்கப்பூரர்கள் அவர்களது பற்றுச்சீட்டுகளைக் குறைந்தது ஒருமுறையாவது பயன்படுத்தியுள்ளனர்.