சிங்கப்பூர்வாசிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஆட்குறைப்பு குறைந்தது, 3ஆம் காலாண்டில் வேகமாக அதிகரித்த வேலைகள்

சிங்­கப்­பூ­ரின் ஊழி­யர் சந்தை மீட்சி­ய­டைந்து வரும் அறி­கு­றி­யாக, சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான வேலைவாய்ப்பு மிக வேக­மாக பெரு­கி­வ­ரு­கிறது. இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் ஆட்­கு­றைப்பு குறைந்­துள்­ளது. வேலை வாய்ப்­பும் ஐந்­தா­வது காலாண்­டாக தொடர்ந்து அதி­க­ரித்­துள்­ளது.

எனி­னும், வேலை­யின்மை விகிதம் கொள்­ளை­நோய்ப் பர வலுக்கு முந்­தைய நிலை­மை­யை­விட அதி­க­மாக, மேலும் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள் புதிய வேலை­தேட ஆறு மாதங்­க­ளுக்கு மேல் ஆகிறது என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட ஊழி­யர் சந்தை அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

செப்­டம்­பர் வரை­யி­லான மூன்று மாத காலத்­தில், தக­வல் தொடர்பு, தொழில்­முறை சேவை­கள், நிதிச் சேவை­கள் போன்ற வெளி­நா­டு­கள் சார்ந்த துறைகளால் சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கு வேலை­வாய்ப்பு 19,100 ஆக கூடியுள்­ளது.

நிர்­வா­கம் அதற்கு ஆத­ரவு சேவை வழங்­கும் துறை­கள், சுகா­தா­ரம், சமூக சேவை­கள் போன்ற உள்­ளூர் சார்ந்த சில­ து­றை­களும் வேலை­வாய்ப்பு பெருக உத­வின.

தொட­ரும் எல்­லைக் கட்­டுப்பாடு­கள் கார­ண­மாக பெரும்பா லான துறை­களில் வெளி­நாட்­டி­னர் வேலைவாய்ப்பு குறைந்­த­தால், வேலை­வாய்ப்பு அதி­க­ரித்­துள்ள போதி­லும், வெளி­நாட்டு வீட்­டுப் பணி­பெண்­க­ளைத் தவிர்த்து, மொத்த வேலைவாய்ப்பு 2,400 ஆகக் குறைந்­துள்­ளது என்று மனி­த­வள அமைச்சு குறிப்­பிட்­டது.

எனி­னும், இந்த எண்ணிக்கை இரண்­டா­வது காலாண்­டில் 16,300 ஆக இருந்தது.

இந்த ஆண்டு முழு­வ­தும், வெளி­நாட்­டு ஊழி­யர் வரு­கையை அதி­க­ரிக்க நடவடிக்கை எடுக்­கப்­படு­கிறது. இத­னால், குறிப்­பாக கட்­டு­மா­னம், கடல் துறை, செயல்­மு­றைத் துறை­கள் பய­ன­டைந்­துள்­ளன என்று அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லர் ஆபெக் காம் கூறி­னார்.

செப்­டம்­ப­ரில் ஒட்­டு­மொத்த வேலை­யின்மை விகி­தம் 2.6 விழுக்­கா­டாக இருந்­தது, இதில், சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் 3.5 விழுக்­காடு.

ஆனால், சில்­லறை வர்த்­த­கம், உணவு பானத் துறை போன்ற கொள்­ளை­நோ­யால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட துறை­களில் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட ஊழி­யர்­களுக்கு வேலை தேடு­வ­தில் சிக்­கல்­கள் உள்­ளன.

முந்­தைய காலாண்­டில் 2,340 ஆக இருந்த ஆட்­கு­றைப்பு எண்­ணிக்கை மூன்­றாம் காலாண்­டில் 1,900 ஆகக் குறைந்­தது.

இரண்­டா­வது காலாண்­டில் 5,580 ஆக இருந்து குறைந்த வார கால பணி அல்­லது தற்­கா­லிக பணி­நீக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் எண்­ணிக்கை மூன்­றா­வது காலாண்­டில் 4,060 ஆக குறைந்­துள்­ளது. இது கொரோ­னா­வுக்கு முந்­தைய நிலை­யை­விட அதி­க­ம் என்றாலும், விமானப் போக்­கு­வ­ரத்து, அது சார்ந்த துணைச் சேவை­கள் போன்ற துறைகள் விமா­னப் போக்குவரத்து மீண்­டும் சூடு­பி­டிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் ஊழியர் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளன என்று அமைச்சு கூறியது.

இதற்­கி­டை­யில், பரு­வத்­திற்கு ஏற்ப சரி­செய்­யப்­பட்ட வேலை வாய்ப்பு எண்­ணிக்கை செப்­டம்­ப­ரில் 98,700 ஆக உயர்ந்­த­துள்­ளது. இது ஜூன் மாதத்­தில் 92,100 ஆக இருந்­தது. செப்­டம்­ப­ரில், ஒவ்­வொரு 100 வேலை­யில்­லா­த­வர்­க­ளுக்­கும் 209 வேலை வாய்ப்­பு­கள் இருந்­தன, இது ஜூன் மாதத்தில் 163 ஆக இருந்தது.

சிங்­கப்­பூர் கொவிட்-19 கட்டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி வரும் நிலை­யில், ​​ஊழி­யர் சந்தை தொடர்ந்து மேம்­படும் என நம்­பிக்கை கொண்­டி­ருப்ப­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!