ஓமிக்ரான்: அலட்சியம் கூடாது என்கிறது உலக நிறுவனம்

ஓமிக்­ரான் உருமாறிய கொவிட்-19 கிருமி முன்­னெப்­போதும் இல்­லாத வேகத்­தில் பரவி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்தி, சுகா­தார கட்டமைப்பைப் பாது­காக்க உலக நாடு­கள் உட­னடி­யாகச் செயல்­பட வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

ஓமிக்­ரான் இது­வரை 77 நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார நிறு­வ­னத் தலைவர் டெட்­ரோஸ் அதா­னோம் கேப்­ரி­யே­சுஸ் நேற்று முன்­தி­னம் கூறினார்.

"பெரும்­பா­லான நாடு­களில் ஓமிக்­ரான் தொற்று இன்­ன­மும் கண்­ட­றி­யப்­ப­டா­மல் இருக்­கலாம். முன்பு பரவி வந்த திரி­பை­விட ஓமிக்­ரான் வேக­மா­கப் பர­வு­கிறது," என்­றார் டாக்­டர் டெட்­ரோஸ்.

சில ஐரோப்­பிய நாடு­கள் ஐந்­தா­வது கிரு­மித்­தொற்று அலையை எதிர்­கொண்டு வரு­கிறது என்றார் உலக சுகா­தார நிறு­வ­னத்­தைச் சேர்ந்த நிபு­ணர் அப்டி மஹ்­முட்.

ஜன­வரி நடுப்­ப­கு­தி­யில் ஐரோப்­பா­வில் ஓமிக்­ரான் அதி­க­ம் பர­வி­யி­ருக்­கும் என்று ஐரோப்­பிய ஒன்றிய தலை­வர் உர்­சுலா வான் டெர் லேயன் நேற்று கூறினார். ஒவ்­வொரு இரண்டு அல்­லது மூன்று நாட்­க­ளி­லும் பாதிப்பு இரட்­டிப்­பா­வ­தாக சொன்ன அவர், ஓமிக்­ரானை எதிர்த்­துப் போரா­ட அதிக தடுப்­பூ­சி­யும் பூஸ்­டர் ஊசி­யும் வழங்­கப்­ப­டு­வது முக்­கி­யம் என்றார்.

ஓமிக்­ரான் திரிபு இலே­சான பாதிப்பையே ஏற்­ப­டுத்­தும் என்ற முடி­வுக்கு வரக்­கூ­டாது என்று எச்சரித்துள்ளார் உலக சுகா­தார நிறு­வன நிபு­ணர் புருஸ் ஐய்ல்­வார்ட்.

ஓமிக்­ரான் கடுமை குறை­வாக இருந்தாலும்கூட, அளவுக்கதிகமா னோர் பாதிக்­கப்­படும்போது மருத்து­வ ­ம­னை­கள் மீண்­டும் திண்­டா­டக்­கூ­டும் என்றார் டாக்­டர் டெட்­ரோஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!