ஜனவரி 7 முதல் பொங்கல் கொண்டாட்டம்; கூடுதல் நேரடி நிகழ்ச்சிகள்

இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு , மாட்டுப் பண்ணை , பானைக்கு வண்ணம் தீட்டும் நிகழ்ச்சி, பல இன பொங்கல் கொண்டாட்டம் போன்ற பலதரப் பட்ட நேரடி நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பல நேரடி நிகழ்ச்சிகள் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப இடம்பெறும்.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சென்ற ஆண்டுக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் மெய்நிகர் வடிவில் நடைபெற்றன.

லிட்டில் இந்தியாவில் ஜனவரி ஏழு முதல் 16 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

அதே வேளையில் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலம் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம்.

வழக்கமான ஒளியூட்டும் இவ்வாண்டு உண்டு.

ஓளியூட்டு ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6ஆம் தேதி நிறைவு பெறும்.

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் லி‌‌‌ஷா அமைப்பு புதன்கிழமை (ஜனவரி 5) அன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

இந்த ஆண்டுக் கொண்டாட்டங்களின் கருப்பொருள், குடம்.

இவ்வாண்டு பொங்கல் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியைச் சித்தரிக்க, யானைகள், மாடுகள் ஆகியவற்றுடன் குடங்களின் படங்கறுளும் இவ்வாண்டின் ஒளியூட்டில் இடம்பெறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பல இன மக்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் மாட்டுப் பண்ணைக் காட்சி இந்த ஆண்டும் இடம்பெறும்.

ஜனவரி 7 முதல் விக்னே‌ஷ் பால் பண்ணையைச் சேர்ந்த கால்நடைகளை கிளைவ் ஸ்ட்ரீட்டில் காணலாம்.

கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரைக்கும் கால்நடைகளை 5 பேர் உள்ள குழுக்களில் காணமுடியும்.

அங்கே ஒரு காளை மாடு, இரண்டு பசுமாடுகள், இரண்டு கன்றுக்குட்டிகள், இரண்டு ஆடுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.

பள்ளி மாணவர்கள் ஜனவரி பத்து முதல் 13 ஆம் தேதி வரை, பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்டில், மற்றும் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

பொங்கல் நிகழ்ச்சிகளின் விவரம்:

நிகழ்ச்சி:மாட்டுப் பண்ணை

தேதி: ஜனவரி 7-16

இடம்: பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்

நேரம்: காலை 9 - இரவு 8

யாருக்காக: பொதுமக்கள்

நிகழ்ச்சி: பொங்கல் ஒளியூட்டு

தேதி: ஜனவரி 9 - பிப்ரவரி 6

யாருக்காக: பொதுமக்கள்

நிகழ்ச்சி: பொங்கல் குடம் வண்ணம் பூசுவது

தேதி: ஜனவரி 8-9

இடம்: தேக்கா பிளேஸ்

நேரம்: காலை 11.30/பிற்பகல் 1 /மாலை 5

யாருக்காக: பொதுமக்கள்

நிகழ்ச்சி: பொங்கல் விளக்க நிகழ்ச்சிகள் (பொங்கல் என்றால் என்ன?)

தேதி: ஜனவரி 10-13

இடம்: பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்

நேரம்: காலை 9- மாலை 5

யாருக்காக: பள்ளி மாணவர்களுக்காக

நிகழ்ச்சி: பல இன மக்கள் பொங்கல் கொண்டாட்டம்

தேதி: ஜனவரி 14

இடம்: பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்

நேரம்: மாலை 4 .30 - 6

யாருக்காக: பொதுமக்கள்

நிகழ்ச்சி: வெளிநாட்டு ஊழியர்களின் கோலம் வரையும் நிகழ்ச்சி

தேதி: ஜனவரி 15

இடம்: பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்

நேரம்: காலை 10 - மதியம் 12

யாருக்காக: வெளிநாட்டு ஊழியர்கள்

நிகழ்ச்சி: மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

தேதி: ஜனவரி 15

இடம்: பொலி அட் கிளைவ் ஸ்ட்ரீட்

நேரம்: மாலை 3-5

யாருக்காக: பொதுமக்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!