கால்வாயில் 11 வயது இரட்டையரின் உடல்கள்

அப்­பர் புக்­கிட் தீமா வட்­டா­ரத்­தில் உள்ள விளை­யாட்டு மைதா­னம் ஒன்­றுக்கு அரு­கில் இருக்­கும் கால்­வா­யில் 11 வயது

இரட்­டை­ய­ரின் உடல்­கள்

நேற்று முன்­தி­னம் மாலை

கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இது­தொ­டர்­பாக ஆட­வர் ஒரு­வரைக் காவல்­து­றை­யி­னர் தேடி வரு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அந்த ஆட­வர் நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 3 மணி அள­வில் கிரீன்­ரிட்ஜ் கிர­செண்ட் வட்­டா­ரத்­தில் காணப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் 30 வய­துக்­கும் 40 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர் என்­றும் சாம்­பல் நிற சட்டை, ‘ஸ்போர்ட்ஸ்’ கால­ணி­கள் அணிந்­தி­ருந்­த­தா­க­வும் காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

அவர் எந்த இனத்­தைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

அவ­ரைப் பார்த்­தால் உட­னடி ­யா­கத் தக­வல் தெரி­விக்­கும்­படி டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்­குச் செய்தி அனுப்­பப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் மாலை 6.25 மணி அள­வில் கிரீன்­ரிட்ஜ் கிர­செண்ட்­டில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்­தி­லி­ருந்து இரட்­டை­ய­ரின் தந்தை உதவி கேட்டு அழைத்­த­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்­துக்கு விரைந்த அதி­கா­ரி­கள், அரு­கில் இருந்த கால்­வா­யில் அந்த ஆடவரின் 11 வயது மகன்­கள் பேச்­சு­

மூச்­சின்றி கிடப்­ப­தைக் கண்­ட­னர். சிறு­வர்­கள் இரு­வ­ரும் மாண்டு­ விட்­ட­தாக மருத்­துவ உத­வி­யா­ளர் தெரி­வித்­தார்.

இயற்­கைக்கு மாறான மர­ணம் என்று சிறு­வர்­க­ளின் மர­ணத்தைக் காவல்­து­றை­யி­னர் வகைப்­ப­டுத்தி விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சம்­பவ இடத்­துக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ளர்­கள் நேற்று பிற்­ப­கல் சென்­றி­ருந்­த­போது, காவல்­து­றை­யின் கூர்க்­கா பிரி­வு அதி­கா­ரி­கள் கால்­வா­யி­லும் அரு­கில் உள்ள வனப் பகு­தி­யி­லும் தேடு­தல் பணி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

கால்­வா­யின் குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யில் சோஃபா நாற்­காலி

மெத்­தை­கள் போன்ற பொருள்­கள் காணப்­பட்­டன.

நேற்று மாலை 4 மணி அள­வில் இரட்­டை­ய­ரின் உடல் கண்­டெ­டுக்­கப்­பட்ட இடத்­தில் இரு ஆட­வர்­களும் இரு பெண்­களும் மெழு­கு­வர்த்­தி­க­ளை ஏற்றி வழி­பட்­ட­னர். அவர்­களில் ஒரு­வர் மாண்ட சிறு­வர்­க­ளின் சகோ­தரி எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இரட்­டை­யர் இரு­வ­ரும் ஆறு அல்­லது ஏழு வயதாக இருந்­த­போது அவர்­க­ளைப் பார்த்­தி­ருப்­ப­தா­க­வும் அவர்­கள் எப்­போ­தும் துடிப்­பு­ட­னும் சுறு­சு­றுப்­பா­க­வும் இருந்­த­தாகவும் சிறு­வர்­க­ளின் சகோ­த­ரி­யு­டன் வந்திருந்த

40 வயது ஆட­வர் தெரி­வித்­தார்.

சிறுவர்கள் இருவரும் சிறப்­புத் தேவை­யுள்­ள­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

கால்­வா­யைச் சுற்­றி­யுள்ள வட்­டா­ரத்­தில் பல தரை வீடு­கள் உள்­ளன. அவ்­வட்­டா­ரத்­தில் பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்பு

கேம­ராக்­களில் பதி­வா­கி­யுள்ள காட்சிகளைப் பெற குடி­யி­ருப்­

பா­ளர்­களைக் காவல்­து­றை­யி­னர் அணு­கி­யி­ருப்­ப­தாக நம்­பப்படு­ கிறது.

இதற்­கி­டையே, இரட்­டை­ய­ரின் மர­ணம் தம்மைத் துய­ரில் ஆழ்த்தி ­இருப்­ப­தாக ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிம் ஆன் தெரி­வித்து­உள்­ளார்.

“இது நினைத்­துப் பார்க்க முடி­யாத சோக நிகழ்வு. பெற்­றோ­ராக இருக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் இது குலை நடுங்க வைக்கும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

“இந்­தச் சம்­ப­வம் நமது சமூ­கத்­துக்கு நிச்சயம் அதிர்ச்­சி, மன­வே­த­னையை ஏற்­ப­டுத்­தி­யிருக்­கும். எங்­கள் எண்­ணம் எல்­லாம் மாண்ட இரட்­டை­ய­ரின் குடும்­பத்­து­டன் உள்­ளது. அவர்­க­ளுக்­காக நாங்­கள் பிரார்த்­திக்­கி­றோம்,” என்று திரு­வாட்டி சிம் ஆன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

என்ன நடந்­தது என்று தெரி­யா­மல் வெறும் ஊக அடிப்­ப­டை­யில் இரட்­டை­ய­ரின் மர­ணம் குறித்து பேச வேண்­டாம் என்­றும் காவல்­து­றை­யின் அதி­கா­ர­பூர்­வத் தக­வ­லுக்­காக காத்­தி­ருக்­கும்­ப­டி­யும் அவ்­வட்­டா­ரக் குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!