நான்காவது தடுப்பூசி போடப்பட்ட 103 வயது மூதாட்டியின் மரணம் குறித்து விசாரணை

தவ­று­த­லாக நான்­கா­வது கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டதை அடுத்து 103 வயது மூதாட்டி உயிர் இழந்த ­சம்­ப­வத்­தைப் பற்றி சுகா­தார அமைச்சு விசா­ரித்து வரு­கிறது. நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழு அவ­ருக்கு அந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்­டது.

பரா­ம­ரிப்பு இல்­ல­வா­சி­யான மூதாட்டி டிசம்­பர் 16ஆம் தேதி சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அவருக்கு நிமோனியா காய்ச்சலும் உடலின் உப்பு அளவு குறைவாகவும் இருந்தன.

மூன்று நாள்­க­ளுக்கு முன்­னர்­தான் அவ­ருக்கு நான்­கா­வது தடுப்­பூசி போடப்­பட்­டது. மூதாட்­டிக்­குப் பக்­க­வா­தம் ஏற்­பட்­டி­ருந்­த­தா­கப் பிறகு தெரி­விக்­கப்­பட்­டது. அவர் ஜன­வரி 10ஆம் தேதி மாண்­டார். மூதாட்­டி­யின் மர­ணத்­துக்கு நிமோனியா காய்ச்­சல்­தான் முக்­கிய கார­ணம் என்று பிரே­தப் பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­தது.

கூடு­தல் கார­ணங்­க­ளாக பக்­க­வா­தம், இத­ய­நோய் போன்­றவை குறிப்­பி­டப்­பட்­டன. இவற்­றுக்­கும் தடுப்­பூசி போட்­ட­தற்­கும் தொடர்பு உள்­ளதா என்று மரண விசா­ரணை அதிகாரி இன்­ன­மும் தீர்­மா­னிக்­க­வில்லை. ஆனால் இவை முதியவர்களுக்கு பொதுவாக ஏற்படும் இயற்கையான நோய்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இச்­சம்­ப­வம் குறித்து அமைச்சு நேற்று அறிக்கை விடுத்­தது. அந்­தச் சம்­ப­வத்­தைக் கடு­மை­யா­கக் கருத்­தில் கொள்­வ­தா­க­வும் அது­பற்றி முழு­மை­யான விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் அமைச்சு கூறி­யது. அந்த விசா­ரணை இம்மாதம் முடி­வு­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"தடுப்­பூசி நடை­மு­றை­களில் ஏற்­பட்ட முறை­கேட்­டா­லும், பரா­ம­ரிப்பு இல்­லத்­துக்­கும் தடுப்­பூ­சி­யைக் கையாண்ட மருந்­த­கத்­துக்­கும் இடை­யி­ல் முறையான தொடர்பு இல்­லா­த­தா­லும் தடுப்­பூசி தவ­று­த­லா­கப் போடப்­பட்­டது என்று எங்­கள் முதல்­கட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இக்­கான் ஹெல்த்­கேர் நிறு­வ­னம் நடத்­தும் சாய் சீ பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் அந்த மூதாட்டி வசித்து வந்­தார்.

பான்­கேர் மருந்­தகத்­தின் குழு மூதாட்­டிக்­குத் தடுப்­பூசி போட்­டது. நல்­லெண்ண அடிப்­ப­டை­யில், மூதாட்­டி­யின் மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணத்தை இரண்டு அமைப்­பு­களும் கூட்­டா­கச் செலுத்­தின என்று அமைச்சு தெரி­வித்­தது.

நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழு ஒன்று, ஒரு­வரைத் தவறாக அடையாளம் கண்டு, தவறு­தலாக அவ­ருக்கு தடுப்­பூசி போட்ட முதல் சம்­ப­வம் இது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் இது­வரை சுமார் 152,000 தடுப்­பூ­சி­க­ளைச் செலுத்­தி­யுள்­ளன.

இந்­தச் சம்­ப­வத்­தைப் பற்றி டிசம்­பர் மாதமே தெரி­விக்­கத் திட்­ட­மிட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது. ஆனால் அந்த மூதாட்­டி­யின் அடை­யா­ளத்தை தெரி­விக்­கும் தக­வல்­களை வெளி­யிட வேண்­டாம் என்று அவ­ரது குடும்­பம் அமைச்­சைக் கேட்­டுக்­கொண்­டது.

அவ­ரது குடும்­பத்தை மீண்­டும் தொடர்புகொண்ட பின்­னர், சம்­ப­வத்­தைப் பற்றி தெளி­வு­ப­டுத்த இந்த தக­வல்­களை வெளி­யி­டுவதாக அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!