அமெரிக்கா: ரஷ்யாவிடம் ஆக்கிரமிப்பு திட்டம்; கொலை பட்டியல்

ஜெனி­வா­வில் இருக்­கும் ஐநா மனித உரி­மை­கள் அமைப்­பின் தலை­வ­ருக்கு அமெ­ரிக்கா கடி­தம் ஒன்றை அனுப்பி இருக்­கிறது.

ரஷ்யா பட்­டி­யல் ஒன்றை தயா­ரித்து இருக்­கிறது. அந்­தப் பட்­டி­ய­லில் உக்­ரேனின் குடி­மக்­கள் பலரின் பெயர்­கள் உள்­ளன. உக்ரேன் மீது படை­யெ­டுத்து அந்த நாட்டை கைப்­பற்றி அதற்­குப் பிறகு, அந்த உக்­ரேனி­யர்­களைக் கொலை செய்ய அல்­லது தடுப்­புக் காவல் முகாம்­களுக்கு அவர்களை அனுப்ப ரஷ்யா திட்­ட­மி­டு­கிறது.

இதற்­கான நம்­பத்­த­குந்த தக­வல் கிடைத்து இருக்­கிறது என்று அந்­தக் கடி­தத்­தில் அமெ­ரிக்கா தெரி­வித்து உள்­ள­தாக நியூ­யார்க் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கடி­தம், ஐநா மனித உரிமை தலை­வ­ரான திரு­வாட்டி மிச்சல் பாச்­லேட்­டுக்கு அனுப்­பட்டு உள்­ளது. பர­வ­லான முறை­யில் மனித உரிமை மீறல்­களை அரங்­கேற்ற ரஷ்ய படை­கள் திட்­ட­மிட்டு இருக்­கின்­றன என்று அந்­தக் கடி­தத்­தில் அமெ­ரிக்கா தெரி­வித்து உள்­ளது.

ரஷ்யா தயா­ரித்து இருக்­கும் கொலை பட்­டி­ய­லில் இருப்­போ­ரில், உக்­ரேனில் வசிக்­கும் ரஷ்யா மற்­றும் பெலா­ருஸ் அதி­ருப்­தி­யா­ளர்­கள், ஊழ­ல் ஒழிப்­பா­ளர்­கள், இன, சமய சிறு­பான்­மை­யி­னர், ஓரின புணர்ச்­சி­யா­ளர், மூன்­றாம் பாலி­னத்­த­வர் ஆகி­யோர் உள்­ளிட்ட பல­ரும் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டும் என்று அந்­தக் கடி­தம் தெரி­விக்­கிறது. அவர்­கள் ரஷ்­யா­வின் செயல்­களை எதிர்ப்­ப­வர்­கள்.

அமை­தி­யாக நடை­பெ­றும் ஆர்ப்­பாட்­டங்­க­ளைக் கலைக்க ரசா­ய­னப் பொருள்­களை ரஷ்­யப் படை­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்­ப­தற்­கான ஆதாரங்களும் கிடைத்து இருக்­கின்­றன என்று அந்­தக் கடி­தம் மேலும் தெரி­விக்­கிறது.

இத­னி­டையே, கிழக்கு உக்­ரே­னில் மக்­க­ளின் உயி­ரு­டன் ரஷ்யா விளை­யா­டு­கிறது என்று குற்­றம் சுமத்­திய ஜெர்­மனி, அந்த விளை­யாட்டை ரஷ்யா நிறுத்­திக்­கொள்ள வேண்­டும் என்றும் பேச்­சு­வார்த்­தைக்கு அது திரும்ப வேண்­டும் என்றும் வலி­யு­றுத்திக் கூறி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!