இந்தியா: 22 மாதங்களில் இல்லாத அளவிற்குத் தொற்று குறைந்தது

இந்­தி­யா­வில் கடந்த 22 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு ஒரு நாள் கொவிட்-19 தொற்று பாதிப்பு குறை­வா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் அங்கு புதி­தாக 3,614 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நேற்­றுக் காலை இந்திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது. இது, கடந்த 2020 மே 12ஆம் தேதிக்­குப் பிறகு ஒரு நாளில் பதி­வான ஆகக் குறை­வான பாதிப்பு.

மேலும் 89 பேர் கொரோனா தொற்­றால் மாண்­டு­போ­யி­னர்.

இத­னை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 42,987,875 ஆக­வும் உயி­ரி­ழப்பு 515,803 ஆக­வும் உயர்ந்­தன.

அன்­றா­டம் கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­படும் விகி­தமும் 0.44 விழுக்­கா­டா­கக் குறைந்­தது. நேற்று முன்­தி­னம் மட்­டும் 821,122 மாதிரி­கள் பரி­சோ­திக்கப்­பட்­டன.

இது­வரை மொத்­தம் கிட்­டத்­தட்ட 1.8 பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டு­விட்­டன.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் மாண்­டோர் எண்­ணிக்கை குறைத்­துக் காட்­டப்­பட்டுள்­ளது என்­றும் அது அதி­கா­ர­பூர்வ எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் எட்டு மடங்கு அதி­க­மாக இருக்­கும் என்­றும் புகழ்­பெற்ற 'லான்­செட்' மருத்­துவ சஞ்­சிகை மதிப்­பிட்­டு இருக்கிறது.

ஆயி­னும், அதனை ஏற்க மறுத்­துள்ள இந்­திய சுகா­தார அமைச்சு, அந்த ஆய்­வ­றிக்கை ஊகத்­தின் அடிப்­ப­டை­யி­லா­னது என்­றும் தவ­றான தக­வ­லைத் தந்­துள்­ளது என்­றும் விளக்­க­ம­ளித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!