இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பு

இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு மீண்­டும் தலை­யெ­டுக்­கத் தொடங்கி­உள்­ளது.

அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட புள்ளி­வி­வ­ரப்­படி, கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 2,183 பேரை கொரோனா தொற்­றி­யி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது, அதற்கு முந்­திய நாளைப்­போல கிட்­டத்­தட்ட இரு­மடங்கு பாதிப்பு. கடந்த ஒரு மாதத்­தில் பதி­வான அன்­றாட பாதிப்­பு­களில் இதுவே ஆக அதி­கம்.

கடந்த 24 மணி நேரத்­தில் அதி­க­பட்­ச­மாக கேர­ளா­வில் 940 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. டெல்­லி­யில் 517 பேருக்­கும் அரி­யா­னா­வில் 191 பேருக்­கும், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 135 பேருக்­கும், மகா­ராஷ்­டி­ரா­வில் 127 பேருக்­கும் தொற்று உறு­தி­யா­னது. தமிழ்­நாட்­டில் நேற்று 30 பேருக்கு தொற்று உறு­தி­யா­னது.

டெல்லியில் கடந்த 15 நாள்­களில் பாதிப்பு விகி­தம் ஐந்து மடங்கு கூடி­விட்­ட­தாக 'லோக்­கல் சர்க்­கிள்ஸ்' எனும் நிறு­வ­னத்­தின் கருத்­தாய்வு தெரி­விக்­கிறது. அங்கு பரி­சோ­த­னை­யில் தொற்று உறு­திப்­படுத்­தப்­ப­டு­ம் விகி­த­மும் 5.33% என அதி­க­ரித்­துள்­ளது.

டெல்­லி­யி­லும் அதனை ஒட்­டி­ அமைந்துள்ள காஸி­யா­பாத், நொய்டா நக­ரங்­க­ளி­லும் கடந்த சில வாரங்­களில் மாண­வர்­கள் பலரை கொவிட்-19 தொற்­றி­விட்­டது. இத­னால் அங்கு பல பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. ஒரே ஒரு மாண­வ­ருக்­குத் தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டா­லும் பள்­ளியை மூடும்­படி டெல்லி அரசு சென்ற வாரம் ஆணை பிறப்­பித்­தி­ருந்­தது.

அத்­து­டன், கொரோனா தொற்­றுக்கு மேலும் 214 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். அவற்­றில் 213 மர­ணங்­கள் கேரள மாநி­லத்­தில் பதி­வா­யின. தொற்­றால் முன்­னர் இறந்து, கணக்கில் சேர்க்கப்படாத 212 பேர் அவர்களில் அடங்­கு­வர். இத­னை­ அடுத்து, கொரோனா தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 521,965ஆக உயர்ந்­து­விட்டது.

நாட்­டில் தொற்று பாதிப்பு மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ள­போ­தும், நான்­கா­வது தொற்று அலை ஏற்­பட வாய்ப்பு குறைவு என்று கான்­பூ­ரில் உள்ள இந்­தி­யத் தொழில்­நுட்­பக் கழ­கப் பேரா­சி­ரி­யர் மணிந்த அகர்­வால் தெரி­வித்­து இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!