கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மறுஆய்வு

அமைச்சர் வோங்: அடுத்த பெருந்தொற்றுக்குச் சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தும்

கொவிட்-19 பெருந்­தொற்­றுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் முதற்­கட்ட நட­வ­டிக்கைகள் குறித்த மறு­ஆய்வு இடம்­பெற்று வரு­வ­தாக நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­து இருக்கிறார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பர­வத் தொடங்­கி­யது முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை­யி­லான கால­கட்­டத்தை அது குறிக்­கும்.

இந்த விரி­வான, செயல்­பாட்­டிற்­குப் பிந்­திய மறு­ஆய்­வா­னது அடுத்த பெருந்­தொற்­றைச் சிறந்த முறை­யில் எதிர்­கொள்­ளும் வகை­யில் சிங்­கப்­பூரை வைக்­கும் என்­றும் முன்­னாள் பொதுச் சேவைத் துறைத் தலை­வர் பீட்­டர் ஹோ அந்த மறு­ஆய்வு நட­வ­டிக்­கையை மேற்­பார்­வை­யி­டு­வார் என்­றும் அமைச்­சர் வோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

கொவிட்-19 தொற்றுக்கெதிரான அரசின் நட­வ­டிக்­கை­கள் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் கடந்த ஜூலை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அந்த மறு­ஆய்வு முறை குறித்­தும் அதன்­மூ­லம் கண்­ட­றி­வ­தைப் பொது­மக்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளதா என்­பது குறித்­தும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங் மன்­றத்­தில் நேற்று கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய திரு வோங், கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் நடவடிக்­கை­களை இரு பரந்த கட்டங்­க­ளாக வகைப்­ப­டுத்­த­லாம் என்று குறிப்­பிட்­டார்.

"கொவிட்-19 பர­வத் தொடங்­கி­ய­தில் இருந்து 2021 ஆகஸ்ட் வரை­யி­லான முதற்­கட்­டத்­தில், கொரோனா கிரு­மி­யின் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்­தி­னோம். அதன்­பின், அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போட்­ட­தும், கொரோ­னா­வு­டன் வாழும் வகை­யில் நமது அணு­கு­மு­றையை மாற்­றிக்­கொண்­டோம்.

"இன்­னும் கொவிட்-19 தொற்று முடி­விற்கு வர­வில்லை என்­ற­போதும், நிலைமை மேம்­பட்­டுள்­ளது. ஆத­லால், நமது முதற்­கட்ட அனு­பவத்­தில் கவ­னம் செலுத்­தும் வகை­யில், கிருமித்தொற்­றுக்­கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் குறித்த மறு­ஆய்வை அர­சாங்­கம் தொடங்கி­விட்டது," என்று அமைச்­சர் வோங் விளக்­க­மா­கப் பதி­லு­ரைத்­தார்.

கொரோனா பர­வ­லுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் அனு­ப­வங்­கள் குறித்­தும் கற்­றுக்­கொண்ட பாடங்­கள் குறித்­தும் முழு­மை­யாக ஆராய மறு­ஆய்வு இலக்கு கொண்­டுள்­ளது என்று அப்பெருந்தொற்றுக்கு எதி­ரான அமைச்சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங் குறிப்­பிட்­டார்.

இன்னொரு பெருந்தொற்று நிச்சயமாக வரும் என்றும் அவர் சொன்னார்.

மறு­ஆய்வு நிறை­வடைந்­த­பின் அதன்­மூ­லம் கண்­ட­றிந்­த­வற்றை அர­சாங்­கம் பகிர்ந்து­கொள்­ளும் என்றார் அவர்.

இந்த மறு­ஆய்வு ஒட்­டு­மொத்த அர­சாங்­க­மும் பங்­கு­கொள்­ளும் நட­வ­டிக்கை எனக் குறிப்­பிட்ட திரு வோங், கொவிட்-19 அனு­ப­வத்­தில் இருந்து கற்­றுக்­கொண்டு, அடுத்த பெருந்­தொற்றை எதிர்­கொள்­ளத் தயா­ரா­வதே இலக்கு என்­றும் மீண்­டும் வலி­யு­றுத்­திச் சொன்­னார்.

கடந்த 2003ஆம் ஆண்­டில் சார்ஸ் பர­வ­லுக்­குப்­பின் இது­போன்ற மறு­ஆய்வு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டதை அவர் சுட்­டி­னார்.

அந்த மறு­ஆய்வே, 'டோர்ஸ்­கான்' எனப்­படும் தேசிய அள­விலான நோய்ப் பர­வ­லுக்­கு­ரிய விழிப்பு­நிலை எச்­ச­ரிக்­கைக் கட்­ட­மைப்பை உரு­வாக்­க­வும் தேசிய தொற்­று­நோய்­கள் தடுப்பு நிலை­யம் ஏற்­ப­டுத்­த­வும் வித்­திட்­டது.

"நமது விநி­யோ­கத் தொடர்­பு­களை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம், பல்­வேறு துறை­க­ளி­லும் நமது தேசிய மீட்­சித்­தி­றனை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்­பன உள்­ளிட்ட பரந்­து­பட்ட அள­வில் பல பாடங்­களை நாம் இந்த மறு­ஆய்­வின்­மூ­லம் கற்­றுக்­கொள்­வோம் என நம்­பு­கி­றோம்," என்­றார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!