அடுத்த கொவிட்-19 தொற்று அலைக்கு நாடு தயாராகிறது

'சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ஏற்படக்கூடும்'

சிங்­கப்­பூ­ரில் அடுத்த கொவிட்-19 அலை ஜூலை அல்­லது ஆகஸ்ட்­டில் ஏற்­ப­டக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். தாதிமை இல்லங்­கள் முதல் சமூக மருத்­து­வ­மனை­கள் வரை ஒவ்­வொரு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மும் இதற்­குத் தயா­ராக வேண்­டும் என்று அவர் கூறி­யுள்ளார்.

ஓமிக்­ரான் அலை­யின்­போது கொவிட்-19 நோயா­ளி­கள் பலர் பொது மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். ஏனெ­னில், அவர்­க­ளுக்கு சிகிச்சை அளித்த தாதிமை இல்லங்­கள், சமூக மற்­றும் மருத்­து­வ­மனை­க­ளால் அவர்­க­ளைச் சரியாகக் கவ­னிக்க இய­லா­மல் போனது. அதே நிலை சிங்­கப்­பூருக்கு மீண்­டும் ஏற்­ப­டக் கட்டுப்­படி­யா­காது என்­றார் அமைச்­சர் ஓங்.

சுகா­தார அமைச்­சின் வரு­டாந்­திர பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு நேற்று பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

"ஒவ்­வொரு சுகா­தா­ரப் பரா­மரிப்பு நிலை­ய­மும் கொவிட்-19க்கு தயா­ராக இருக்க வேண்­டும். நோயா­ளி­க­ளைத் தங்­கள் இடத்­தி­லேயே பரா­ம­ரிக்க அவற்­றால் முடிய வேண்­டும். ஏனெ­னில், தடுப்­பூசி மூலம் பல­ரும் பெரிய பாதிப்­பின்றி குண­ம­டைந்­து­விடுவர்," என்­றார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் முதன்­மு­றை­யா­கக் கண்­ட­றி­யப்­பட்ட பிஏ.4, பிஏ.5 ஓமிக்­ரான் துணைத் திரி­பு­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய கொவிட்-19 அலைக்கு சிங்­கப்­பூர் தயா­ராகி வரு­கிறது.

இதில் நல்ல செய்தி என்­ன­என்­றால், துணைத் திரி­பு­க­ளால் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் ஏற்­பட்ட தொற்­று பாதிப்பு, முதன்­மு­றை­யாக எழுந்த ஓமிக்­ரான் அலை­யை­விடக் குறைவு. மேலும், துணைத் திரி­பு­க­ளால் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கையோ மரண விகி­தமோ அதி­க­ரிக்­க­வில்லை.

பல்­வேறு கொவிட்-19 அலை­களைக் கடந்து வந்­துள்ள சிங்­கப்­பூர் நம்­பிக்­கை­யு­டன் இருக்­க­லாம் என்­றார் அமைச்­சர் ஓங். குறிப்­பாக, இங்கு தடுப்­பூசி விகி­தம் அதி­க­மாக இருப்­ப­தோடு முகக்­கவசம் அணி­யும் விதி­களும் தொடர்ந்து நடப்­பில் உள்­ளன.

என்­றா­லும்­கூட, கொவிட்-19க்கு எதி­ராக சிங்­கப்­பூர் அதன் தற்­காப்பை வலுப்­ப­டுத்த வேண்­டும். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் அனைத்­தும் கொவிட்-19 நோயா­ளி­க­ளைக் கையாள முடி­வதை உறு­தி­செய்­வ­து­டன், கூடு­தலான மருத்­து­வ­மனை படுக்­கை­களை அமைக்க வேண்­டும்.

இது, மூன்று வழி­களில் செய்­யப்­ப­டு­வ­தாக திரு ஓங் விவ­ரித்­தார். முத­லா­வ­தாக, மருத்­து­வ­மனை­கள் இல்­லப் பரா­ம­ரிப்­புச் சேவை­களை அறி­மு­கம் செய்­துள்­ளன. தங்­கள் சொந்த வீட்­டில் இருந்­த­வாறே தங்­க­ளைப் பரா­மரித்­துக்­கொள்ள இந்த ஏற்­பாடு வகை­செய்­கிறது.

இரண்­டா­வ­தாக, நீண்­ட­கால மருத்­து­வ­மனை நோயா­ளி­கள் பல­ரும் தாதிமை இல்­லங்­களில் இடத்­துக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர். அங்கு படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்­தால், அத்­த­கைய நோயா­ளி­கள் அங்கு மாற்­றப்­ப­ட­லாம்.

கடை­சி­யாக, சமூக சிகிச்சை நிலை­யங்­கள் செயல்­படும் முறை மாற்­றப்­பட வேண்­டும் என்­றார் அமைச்­சர் ஓங். அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட வேண்­டிய, அதே வேளை­யில் சீரான மருத்­துவ நிலை­யு­டன் உள்ள வயது முதிர்ந்த கொவிட்-19 நோயா­ளி­களை ஏற்­றுக்­கொள்ள இத்­த­கைய நிலை­யங்­கள் கடந்த ஆண்டு அமைக்­கப்­பட்­டன.

இனி, மருத்­து­வ­ம­னை­யில் வழங்­கப்­படும் தீவிர பரா­ம­ரிப்பு தேவைப்­ப­டாத எந்­த­வொரு நோயா­ளி­யை­யும் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் இந்த நிலை­யங்­கள் மறு­வ­டி­வ­மைக்­கப்­பட வேண்­டும் என்று திரு ஓங் சொன்­னார்.

மேலும், தடுப்­பூ­சிக்­குத் தகுதி­பெ­றும் 60 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மூத்­தோர், கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள சிங்­கப்­பூர் அதன் முயற்­சி­களில் தொடர்ந்து கவ­னம் செலுத்த வேண்­டும். இந்­தப் பிரி­வி­ன­ரி­டையே ஏறக்­கு­றைய 12 விழுக்­காட்­டி­னர் இன்­னும் கூடுதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை.

அந்திமகாலப் பராமரிப்புக்குக் கூடுதல் ஆதரவு

இதற்­கி­டையே, பெரும்­பா­லா­னோர் தங்­க­ளுக்கு நன்கறிந்த சூழ­லில் இறக்க விரும்­பி­னா­லும், 61 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­மனை படுக்­கை­யில்­தான் கடைசி நாள்­க­ளைச் செல­வி­டு­கின்­ற­னர்.

எனி­னும், அந்­தி­ம­கா­லப் பரா­மரிப்­புக்கு அளிக்­கப்­படும் ஆத­ரவை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம், ஐந்து ஆண்­டு­களில் இந்த விகி­தத்­தைக் குறைக்க சிங்­கப்­பூர் விரும்­பு­வ­தாக திரு ஓங் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!