‘கொவிட்-19 விதிகளைத் தளர்த்த திட்டமில்லை’

உட்புறங்களில் முகக்கவசம் அணியும் நடைமுறை நீடிக்கும்: சுகாதார அமைச்சு

உட்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது உள்­ளிட்ட கொவிட்-19 விதி­களைத் தளர்த்த இப்­போ­தைக்­குத் திட்­ட­மில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அண்­மைய கொவிட்-19 அலை­ உச்சத்தைக் கடந்­து­விட்­டபோதிலும் நடப்­பி­லுள்ள பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் தொடர்ந்து நீடிக்­கும் என்று அமைச்சு கூறி­ உள்ளது.

"கொவிட்-19 பாதிப்பு குறைந்து வரு­கிறது. இருப்­பி­னும் பாதிக்­கப்­படு­வோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது; அபா­யங்­களும் நீடிக்­கின்­றன. அத­னால், நிலை­மை­யைப் பொறுத்து நட­வ­டிக்­கை­களை முடிவுசெய்­வதை சுகா­தார அமைச்சு தொட­ரும்," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

கடந்த மாதம் 13ஆம் தேதி 16,870 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், நேற்று முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை அந்த எண்­ணிக்கை 7,776ஆக குறைந்­தது. இப்­போ­தைய பாதிப்­பிற்கு பிஏ.4, பிஏ.5 ஓமிக்­ரான் கிரு­மித் திரி­பு­களே பெரி­தும் கார­ணம்.

இத­னை­ய­டுத்து, கடைத்­தொகுதி­கள், பொதுப் போக்­கு­வரத்து போன்­ற­வற்­றில் கட்­டா­யம் முகக்­ க­வ­சம் அணி­வது உட்­பட இப்­போது நடப்­பி­லி­ருக்­கும் கொவிட்-19 விதி­க­ளைத் தளர்த்­தும் திட்­டங்­கள் உள்­ள­னவா என்று கேட்­கப்­பட, அமைச்சு இவ்­வாறு பதி­ல் அ­ளித்­துள்ளது.

பெரும்­பா­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் தளர்த்­தப்­பட்டு­விட்ட நிலை­யில், மதுக்­கூடங்­கள், நட­னத்­து­டன் கூடிய இர­வுக் கேளிக்கை விடு­தி­கள் போன்ற இடங்­க­ளுக்­குச் செல்­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

வழி­பாட்டு சேவை­கள், நேரடி நிகழ்­வு­கள் போன்ற 500 பேருக்கு­மேல் பங்­கேற்­கும் நிகழ்­வு­களில் இடம்பெறுவோரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

உட்­பு­றங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்ற நடை­மு­றை­யைத் தொடர வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று சிங்­கப்­பூர் சுகா­தார வல்­லு­நர்­களில் சிலர் அண்­மை­யில் தெரி­வித்­து இ­ருந்­த­னர்.

உட்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­ப­தால் விளை­யும் நன்­மை­கள் குறித்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரக் கழக ஆய்­வுப் பிரி­வின் துணைத் தலை­வரும் இணைப் பேரா­சி­ரி­யரு­மான அலெக்ஸ் குக் கேள்வி எழுப்பி இருந்­தார்.

"மக்­கள்­தொ­கை­யில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேல் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­னர். பாதிப் பேருக்கு­மேல் கொரோனா தொற்­றி­விட்­டது. ஆதலால், கட்­டாய முகக்­கவச விதி­மு­றை­யைத் தொடர வேண்­டிய தேவையில்லை," என்­றார் பேரா­சிரி­யர் குக்.

ஆயி­னும், முகக்­க­வ­சம் அணி­வது அறி­கு­றி­யின்றி கொவிட்-19 தொற்­றி­யோ­ரி­டையே அது பர­வும் அபா­யத்­தைக் குறைத்­துள்­ளது என்­றும் தொற்­றுக்கு ஆளா­னோர் பிற­ரு­டன் கலந்­து­ற­வா­டும்­போ­தும் முகக்­க­வ­சம் அணி­வ­தைத் தொடர வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2020 ஏப்­ர­லில் கொவிட்-19 பர­வல் முறி­யடிப்­புத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது, பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

கடந்த மார்ச்­சில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களில் பல­வும் தளர்த்­தப்­பட்­டது. அதில், வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் கட்டாயமில்லை என்­ப­தும் ஒன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!