பைடன்: 60 ஆண்டு காணாத அணுவாயுதப் பேரழிவு அபாயம்

நியூயார்க்: கடந்த 1962ஆம் ரஷ்­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே இருந்த பனிப்­போ­ருக்­குப் பின்­னர், உல­கம் முதன்­மு­றை­யாக அணு­வா­யு­தப் பேர­ழிவு ஏற்­படும் அபா­யத்தை எதிர்­நோக்­கு­வ­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

உக்­ரேன் போரை ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் எவ்­வாறு முடி­வுக்கு கொண்டு வரக்­கூ­டும் என்று அமெ­ரிக்கா கண்­ட­றிய முயன்­று ­வ­ரு­வ­தாக திரு பைடன் கூறி­னார்.

உக்­ரேன் மீதான தாக்­கு­த­லைத் தொடர, தாம் அணு­வா­யு­தங்­களை, அல்­லது ரசா­யன, உயி­ரி­யல் ஆயுதங் ­க­ளைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும் என்று அதி­பர் புட்­டின் 'கேலிக்­காக' மிரட்­ட­வில்லை என்­றார் திரு பைடன்.

நியூ­யார்க்­கில் தமது ஜன­நா­ய­கக் கட்­சிக்கு நிதி திரட்ட நேற்­று­முன்­தி­னம் இரவு நடத்­தப்­பட்ட விருந்­தில் கலந்­து­கொண்டு அதி­பர் பைடன் உரை­யாற்­றி­னார்.

அணு­வா­யு­தப் போர் அபா­யம் பற்றி அமெ­ரிக்க அதி­பர் இவ்­வ­ளவு வெளிப்­ப­டை­யா­கப் பேசி­யி­ருப்­பது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

"கடந்த 1962ஆம் ஆண்டு கென்­னடி கியூபா ஏவு­கணை நெருக்­க­டியை எதிர்­கொண்­ட­தற்­குப் பிறகு அணு­வா­யு­தப் பேர­ழிவு ஏற்­படும் அபா­யத்தை நாம் எதிர்­நோக்­க­வில்லை," என்று திரு பைடன் குறிப்­பிட்­டார். அமெ­ரிக்­கா­வுக்கு அருகே கியூ­பா­வில் அப்­போ­தைய சோவி­யத் யூனி­யன் ஏவு­க­ணை­களை நிறுத்­தி­ய­தால் அணு­வா­யு­தப் போர் அபா­யம் சூழ்ந்­தது.

உக்­ரேன் போரில் அடுத்து அணு­வா­யு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது பற்றி தாம் பரி­சீ­லிக்­கக்­கூ­டும் என்று திரு புட்­டின் கடந்த வாரம் கோடி­காட்­டி­னார். ரஷ்ய பரப்­ப­ள­வைக் கட்­டிக்­காக்க தம்­மால் முடிந்த எல்லா வழி­களையும் மேற்­கொள்­ளப் போவ­தா­க­வும் அவர் கூறி­னார்.

ரஷ்யா அத்­த­கைய ஆயு­தங்­களை சிறிய, கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட முறை­யில் பயன்­ப­டுத்­த­லாம் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். ஆனால் அத்­த­கைய சிறிய தாக்­கு­தல் பெரிய போராக வெடிக்­க­லாம் என்று திரு பைடன் எச்­ச­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!