பாலம் தகர்ப்பு விபத்தா சதியா: விசாரிக்கிறது ரஷ்யா; இது தொடக்கம் என்கிறது உக்ரேன்

ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் பெரு­மை­கூறி வந்த பாலம் ஒன்று நேற்று அதி­காலை இடிந்­து­வி­ழுந்­தது.

பாலத்­தின் சாலை­யில் சென்­று­கொண்டு இருந்த லாரி­யில் ஏற்­பட்ட வெடிப்பு கார­ண­மாக அத­ன­ருகே எரி­பொ­ருளை ஏற்­றிச் சென்ற ரயில் தீப்­பற்றி எரிந்­த­தாக அர­சாங்கச் செய்தி நிறு­வ­ன­மான டாஸ் கூறியது. ரயி­லின் ஏழு பெட்­டி­க­ளுக்கு தீ மள­ம­ள­வென பரவி எரிந்­தது.

தண்­ட­வா­ளத்­தின் ஒரு பகு­தியை கரும்­புகை மறைத்­தது. அத­னைத் தொடர்ந்து அந்த 19 கிலோ­மீட்­டர் நீள கெர்ச் நீரிணை பாலத்­தி­லி­ருந்து வான் நோக்கி தீப்­பந்து பறந்­தது. கடு­மை­யான தீ கார­ண­மாக பாலத்­தின் ஒரு பகுதி இடிந்து கட­லுக்­குள் விழுந்­தது.

2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்­னு­டன் இணைத்­துக்­கொண்ட கிரை­மியா தீபகற்பத்திற்கு இட்­டுச் செல்­லக்­கூ­டிய இந்­தப் பாலம் வழி­யா­கத்­தான் தென் உக்­ரே­னில் போரிட்டு வரும் ரஷ்­யப் படை­யி­ன­ருக்கு ஆயு­தங்­கள் உள்­ளிட்­டவை விநி­யோ­கிப்­பட்டு வந்­தன.

சாலை­யும் ரயில் போக்­கு­வ­ரத்­துக்­கான தண்­ட­வா­ள­மும் அருகருகே அமைக்கப்பட்ட கெர்ச் நீரிணை பாலத்தை கடந்த 2018ஆம் ஆண்டு அதி­பர் புட்­டின் திறந்து வைத்­தார்.

பெரும் பொருட்செலவில், அதா வது US$3.7 பில்லியன் (S$5.3 பில்லி யன்) செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்துவைப்­ப­தன் அடை­யா­ள­மாக அவரே லாரி ஒன்றை அதில் ஓட்­டிச் சென்­றார்.

இது விபத்­து அல்ல என்­றும் கார் குண்டு சதி என்றும் ரஷ்யாவின் தேசிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புக் குழுவை மேற்­கோள் காட்டி இதர ரஷ்ய செய்தி நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்­டன. அதற்­கி­ணங்க, கிரை­மி­யா­வில் உள்ள வட்­டார நாடா­ளு­மன்­றத்­தின் தலை­வர் விளா­டி­மிர் கோஸ்­டான்­டி­நோவ், இது உக்­ரே­னிய நாச­வேலை என்­றார்.

உக்­ரே­னிய ஆத­ரவு டெலி­கி­ராம் சமூக ஊட­கக் குழு ஒன்­றும் இது தாக்­கு­தல் என்­றும் விபத்து அல்ல என்­றும் கூறி­யது.

"கிரை­மி­யா­வுக்கு இது ஒரு தொடக்­கம்," என்று உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்­கி­யின் ஆலோ­ச­க­ரான மைக்­கைலோ போலி­யாக் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும் இச்­சம்­ப­வம் தொடர்­பாக நேர­டி­யாக எதை­யும் அவர் குறிப்­பி­ட­வில்லை.

"சட்­ட­வி­ரோ­தமான அனைத்­தும் அழிக்­கப்­ப­ட­வேண்­டும். உக்­ரே­னில் இருந்து திரு­டப்­பட்ட அனைத்­தும் திருப்­பித் தரப்­பட வேண்­டும். ஆக்­கி­ர­மித்த எல்­லாப் பகு­தி­யி­லி­ருந்­தும் ரஷ்யா வெளி­யேற்­றப்­பட வேண்­டும்," என்று உக்­ரே­னிய அர­சாங்­கத்­தின் டுவிட்­டர் பக்­கத்­தில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

பாலம் எரிந்து விழுந்தது தொடர் பாக உக்ரேனை நேரடியாகக் குற்றம் சாட்டாவிட்டாலும் சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா சூளுரைத்தது.

பாலத்தில் திடீரென்று வெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்பதைக் கண்ட றிவதற்கான விசாரணை ரஷ்யா உட னடியாகத் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!