உக்ரேனிய நகரங்கள்மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்: பாலம் தகர்க்கப்பட்டதற்கு ரஷ்யா பதிலடி

உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ்­வின் மத்­திய பகுதி­யில் நேற்­றுக் காலை ஏரா­ள­மான வெடிப்­புச் சத்­தம் கேட்­டுக்­கொண்டே இருந்­த­தாக நகர மேயர் கூறி­னார். எங்கு பார்த்­தா­லும் தீப்­புகை கரு­மே­கம் போல திரண்­டி­ருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்ட காணொ­ளிப் படங்­கள் பல்­வேறு கட்­ட­டங்­கள் தீப்பிடித்து எரி­வ­தைக் காட்­டின. சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக ரஷ்யா தெரி­வித்துள்­ளது.

அண்மைய மாதங்களில் தலைநகர் கியவ் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இது முதல்முறை. அந்நகரில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும் முக்கிய சாலைச் சந்திப்பு நேற்று தகர்க்கப்பட்டது. ஏராளமான கட்டடங்களும் வாகனங்களும் தீக்கிரை யாகின.

பல்­வேறு நக­ரங்­க­ளின்­மீது ஒரே நேரத்­தில் ஏரா­ள­மான ஏவு­க­ணை­கள் வீசப்­பட்­ட­தால் அந்­ந­க­ரங்­களில் மின்­சார இணைப்­பும் தண்­ணீர் விநி­யோ­க­மும் துண்­டிக்­கப்­பட்­டன.

அடுத்­த­டுத்து 75 ஏவு­க­ணை­களை உக்­ரே­னிய நக­ரங்­கள் மீது ரஷ்­யப் படை பாய்ச்­சி­ய­தாக உக்ரேனிய ராணுவத் தளபதி வலேரி ஸாலுஸ்னி கூறியதாக பிபிசி செய்தி குறிப்பிட்டது.

உக்­ரே­னின் மேற்­குப் பகுதியில் லிவிவ், டெர்­னோ­பிள், ஸைட்­டோ­மிர் ஆகிய நக­ரங்­க­ளின்­மீ­தும் மத்­திய உக்­ரே­னில் டினிப்ரோ மற்­றம் கிர­மென்­சுக் ஆகிய நக­ரங்­க­ளின்­மீ­தும் ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டன. கிழக்­குப் பகு­தி ­யி­லும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தாக உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி கூறினார்.

நாடு முழுவதும் 10 பேர் மாண்டதாக உக்ரேனிய காவல்துறை கூறியது.

கிரை­மி­யா­வுக்கு இட்­டுச் செல்­லும், ரஷ்­ய செல்வாக்­கின் இலக்­க­ண­மா­கத் திகழ்ந்த பாலம் கடந்த சனிக்­கி­ழமை தகர்க்­கப்­பட்­ட­தற்­குப் பதி­லடி நட­வ­டிக்­கை­யாக ரஷ்யா ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்தியிருப்­ப­தாக ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன. பாலம் சேதப்படுத்தப்பட்டதை பயங்க ரவாதச் செயல் என்று ரஷ்ய அதிபர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!