டிச.26 முதல் ரயில், பேருந்துக் கட்டணம் 5 காசு வரை உயரும்

பெரி­ய­வர்­க­ளுக்­கான பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணம் 4 காசு முதல் 5 காசு வரை, அதாவது 2.9 விழுக்­காடு அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது. டிசம்­பர் 26ஆம் தேதி முதல் புதிய கட்­ட­ணம் நடப்­புக்கு வரும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. வரு­டாந்­திர கட்­டண மறு­ஆய்­விற்­குப் பிறகு பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் இதனை அறிவித்தது.

மூத்­தோர், மாண­வர்­கள், குறைந்த வருமான ஊழியர்கள் மற்றும் இய­லா­தோருக்­கான போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணம் 1 காசு உயர்த்­தப்­ப­டு­கிறது. கிட்­டத்­தட்ட 2 மில்­லி­யன் பேர் அல்­லது சிங்­கப்­பூ­ரர்­களில் பாதிப்­பேர் இந்­தப் பிரி­வில் உள்­ள­னர்.

ரொக்­க­மா­கச் செலுத்­தப்­படும் கட்­ட­ணத்­தி­லும் மாதாந்­திர பயண அட்­டை­யி­லும் மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை.

டிசம்­பர் 26 முதல், பயண அட்­டை­யைப் பயன்­ப­டுத்­தும் பெரி­ய­வர்­கள் 8.2 கிலோ­மீட்­டர் வரை­யி­லான தூரத்­திற்கு கூடு­

த­லாக 4 காசு செலுத்த வேண்டி வரும். இதற்­கும் அப்­பாற்­பட்ட பயண தூரத்­திற்கு 5 காசு அதிகரிக்கிறது.

சிங்­கப்­பூர் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும் பெரி­யோ­ரில் சுமார் 54 விழுக்­காட்­டி­னர் 8.2 கிலோ­மீட்­ட­ருக்­கும் குறை­வான பய­ணத்தை மேற்கொள்கிறார்கள்.

உயர்த்­தப்­படும் கட்­ட­ணம் எவ்­வாறு இருக்­கும் என உதா­ர­ணம் காட்­டப்­பட்டு உள்­ளது. கிழக்கு-மேற்கு ரயில் தடத்­தில் பூன் லே-கிள­மெண்டி எம்­ஆர்டி நிலை­யங்­

க­ளுக்கு இடைப்­பட்ட 8.2 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு பய­ணி­கள் $1.45 செலுத்த வேண்டி இருக்­கும். தற்­போது அந்­தக் கட்­ட­ணம் $1.41ஆக உள்­ளது.

அதே­போல, ஹார்­பர்­ஃபி­ரண்ட்-பாய லேபார் எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்கு இடைப்­பட்ட 11.5 கிலோ­மீட்­டர் தூர பய­ணத்­திற்­கான கட்­ட­ணம் $1.64ஆக அதி­க­ரிக்­கும். தற்­போது அது $1.59ஆக உள்­ளது.

இந்­தக் கட்­டண உயர்வு இதை­விட அதி­க­மாக இருந்­தி­ருக்­க­லாம் என்று எரி­பொ­ருள் விலை நில­வ­ரத்­தைச் சுட்­டிக்­காட்டி மன்­றம் தெரி­வித்­துள்­ளது. 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை எரி­பொ­ருள் விலை­கள் ஏறி­ய­தைத் தொடர்ந்து செல­வு­கள் கணி­ச­மாக உயர்ந்­த­தாக அது தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது. மேலும், தற்­போ­தைய கட்­ட­ணக் கணக்­கீட்டு முறைப்­படி பார்த்­தால் அதி­க­பட்ச கட்­டண உயர்வு 13.5 விழுக்­கா­டு­வரை இருந்­தி­ருக்­க­லாம் என்­றது மன்­றம்.

போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­க­ளின் செலவு­ கள் உயர்ந்­த­தற்கு முக்­கியக் கார­ணம் எரி­சக்தி விலை ஏற்­றம்­தான். உலக எரி­சக்தி நெருக்­க­டி­யைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எரி­சக்தி விலை­கள் 117 விழுக்­காடு ஏறி­ய­தாக மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டு பயணக் கட்டணங்களை 13.5 விழுக்காடு என்னும் முழு அளவில் உயர்த்த எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய போக்குவரத்து நிறுவனங்கள் மன்றத்திடம் அனுமதி கோரி இருந்தன. எரிசக்தி விலையேற்றம், உலகப் பணவீக்கம் உயர்வு, திறனாளர்களை நியமிப் பதிலும் அவர்களைப் பணியில் நீட்டிக்கச் செய்வதிலும் உள்ள சவால்கள் போன்ற வற்றைக் கட்டண உயர்வுக்கான காரணங் களாக அவை குறிப்பிட்டிருந்தன. இவற்றுக்கு இடையே உயர்தரத்திலான, நம்பத்தகுந்த பயணத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவை தெரிவித்திருந்தன.

இருப்பினும், 2.9 விழுக்காடு உயர்வை மட்டும் தற்போது கடைப்பிடிக்கவும் எஞ்சிய 10.6 விழுக்காட்டு உயர்வை வருங்கால கட்டண மறுஆய்விற்குத் தள்ளி வைக்கவும் முடிவு செய்துள்ளதாக மன்றம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!