பேரணியில் துப்பாக்கிச் சூடு; இம்ரான் கான் தப்பினார்

பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான், 70, கொலை முயற்­சி­யி­லி­ருந்து உயிர் தப்­பி­யுள்­ளார். வசி­ரா­பாத்­தில் திறந்த வாக­னத்­தில் சென்று ­கொண்­டி­ருந்­த­போது அவர் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது.

இதில் இம்­ரான் கான் காலில் காயத்­து­டன் உயிர் தப்­பி­னார். மூன்று அல்­லது நான்கு முறை துப்­பாக்­கிச் சூட்டுச் சத்­தம் கேட்­ட­தாக பேர­ணி­யில் பங்­கேற்ற சிலர் கூறி­னர்.

வசி­ரா­பாத்­தில் உள்ள ஜாபர் அலி­கான் பகுதி ­யில் திரு கானின் தலை­மை­யில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான பேரணி நடைபெற்றது.

தற்­போ­தைய நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து­விட்டு தேர்­தலை நடத்த வேண்­டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலை­யில் அவரைக் கொல்­வ­தற்­கான முயற்சி அரங்­கே­றி­யுள்­ளது. திரு கானின் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் காலில் குண்டு பாய்ந்­த­தா­க­வும் முன்­னாள் நிதி அமைச்­ச­ரும் திரு கானின் 'பிடிஐ' கட்­சி­யைச் சேர்ந்தவருமான ஆசாத் உமர் தெரி­வித்­தார்.

குண்டு துளைக்­காத வாக­னத்­தில் ஏற்­றப்­பட்டு அவர் உட­ன­டி­யாக லாகூர் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார். மற்­றொரு கட்­சித் தலை­வ­ரான இம்­ரான் இஸ்­மா­யில், திரு கானின் காலில் மூன்று முதல் நான்கு முறை குண்டு பாய்ந்­த­தா­கக் கூறி­னார்.

'போல் டிவி'க்கு அளித்த பேட்­டி­யில் 'ஏகே-47' துப்­பாக்­கி­யால் சுடப்­பட்­ட­போது தானும் திரு கானுடன் இருந்­த­தா­க­வும் அவர் சொன்னார்.

சம்­ப­வத்­துக்­குப் பிறகு திரு கான் ஒரு வாக­னத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­ப­டு­வதை தொலைக்­காட்சி படங்­கள் காட்­டின. அப்­போது அவரை பலர் தாங்­கிச் சென்­ற­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் திரு கான் தவிர மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில் இறைவன் அருளால் இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன் என்று கூறியுள்ளார்.

இம்ரான் கான் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே காவலர்களிடம் சிக்கிய துப்பாக்கிக் காரன், தன்னை யாரும் தூண்டவில்லை என்றும் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!