துருக்கி, சிரியா நிலநடுக்கம்: மரணம் 50,000 வரை சாத்தியம்; 26 மி. பேர் பாதிப்பு; பசியில் 870,000 பேர்; கைக்குழந்தை மீட்பு

துருக்கி, சிரியா எல்­லை­யில் சென்ற திங்­கட்­கி­ழமை அதி­காலை நேரத்­தில் நிகழ்ந்த நில­நடுக்­கத்­தில் 50,000 பேர் வரை மாண்­டி­ருக்­கக்­கூ­டும் என்று ஐநா நிவா­ரண அமைப்­பின் தலை­வர் மார்­டின் கிரி­ஃபித் தெரி­வித்து இருக்­கி­றார்.

துருக்­கி­யில் 24,617 பேரும் சிரி­யா­வில் 3,574 பேரும் மாண்டு இருக்­கி­றார்­கள் என்று இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. ஆயி­ரக்­க­ணக்­கான தொண்டூ­ழி­யர்­கள் மீட்­புப் பணி­களில் இடை­வி­டா­மல் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

இரண்டு மாத கைக்­குழந்தை, முதிய மாது, இரண்டு வயது சிறுமி, ஆறு மாதக் கர்ப்­பிணி, நான்கு வயது சிறுமி, அந்­தச் சிறு­மி­யின் தாயார் ஆகி­யோர் 128 மணி நேரத்­திற்­குப் பிறகு சனிக்­கி­ழ­மை­ இடி­பா­டு­க­ளுக்கு இடையே மீட்­கப்­பட்­ட­தாக மீட்­புப் படை­யி­னர் தெரி­வித்­த­னர்.

அந்த நில­ந­டுக்­கம் கார­ண­மாக ஏறக்­கு­றைய 26 மில்­லி­யன் மக்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். உட­ன­டி­யாக $42.8 மில்­லி­யன் அள­வுக்குச் சுகா­தார பொருள்­கள் தேவைப்­ப­டு­வ­தால் இவற்­றைத் திரட்ட தான் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து இருக்­கிறது.

டஸன் கணக்­கான மருத்­து­வ­ம­னை­கள் இடிந்து கிடப்­பதை அது சுட்­டிக்­காட்­டி­யது.

நில­ந­டுக்­கத்­தின் விளை­வாக குறைந்­த­பட்­சம் 870,000 பேர் பசி­யில் வாடு­கி­றார்­கள் என்றும் அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக உதவி தேவைப்­ப­டு­வ­தா­க­வும் ஐநா அமைப்பு அபா­யச் சங்கு ஊதி­யி­ருக்­கிறது.

துருக்­கி­யில் மட்­டும் பல்­வேறு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 32,000க்கும் மேற்­பட்ட மக்­கள் தேடுதல், மீட்­புப் பணி­யில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள்.

பல நாடு­க­ளை­யும் சேர்ந்த 8,294 தொண்­டூ­ழி­யர்­களும் அய­ராது பாடு­பட்டு வரு­கி­றார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.

இவ்­வே­ளை­யில், துருக்­கி­யில் திருட்டு முயற்­சி­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை ஏமாற்ற முயன்­ற­தா­க­வும் கூறி அந்த நாட்டு அதி­கா­ரி­கள் 48 பேரை கைது செய்ததாக அர­சு ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

பல கட்­ட­டங்­கள் இடிந்­து­விட்­டதை அடுத்து அவற்றைக் கட்­டிய குத்­த­கை­தா­ரர்­கள் சிலர் கைதாகி இருக்­கி­றார்­கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, துருக்­கி­யும் அத­னு­டைய மேற்­கத்­திய நட்பு நாடு­களும் பயங்­க­ர­வா­தக் குழு என்று வர்­ணித்து வரும் குர்­திஸ்­தான் பாட்­டா­ளிக் கட்சி என்ற தரப்பு மீட்­புப் பணி­க­ளுக்­குத் தோதாக போராட்­டத்தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி இருப்­பதாக அறி­வித்து இருக்­கிறது.

35 ஆண்­டு­க­ளாக மூடப்­பட்டு இருந்த ஆர்மீ­னியா, துருக்கி எல்லை முதல்­மு­றை­யா­கத் திறக்­கப்­பட்டு ஐந்து வாக­னங்­களில் உண­வும் தண்­ணீ­ரும் நிடு­ந­டுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­களுக்குக் கொண்டுவரப்­பட்­டன.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரோஸ், விமானம் மூலம் பல்­வேறு மருத்­து­வப் பொருள்­க­ளு­டன் சிரி­யா­வுக்­குச் சென்­றார்.

அங்கு கண்ட காட்சி­கள் தன்னை மன­மு­டை­யச் செய்­து­விட்­ட­தா­க அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!