நான்கு பிள்ளைகளின் மரணங்களுக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுவிப்பு

தம் நான்கு இளம் பிள்­ளை­களைக் கொன்­ற­தற்­காக சிறையில் ­அடைக்கப்பட்ட ஆஸ்தி­ரே­லிய மாது ஒரு­வர், 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நேற்று விடு­விக்­கப்­பட்­டார்.

2003ல் குற்­றம் நிரூ­ப­ண­மா­ன­தா­கக் கூறி அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது, ‘ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆக மோச­மான பெண் தொடர் கொலை­யாளி’ என்று திரு­வாட்டி கேத்லின் ஃபோல்பிக் அழைக்­கப்­பட்டு வந்­தார்.

அப்­பிள்­ளை­களை மூச்­சுத் திணற வைத்து அவர் கொன்­ற­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் வாதிட்­ட­னர். ஆனால், இயற்­கை­யான கார­ணங்­க­ளா­லேயே ஒவ்­வொரு பிள்­ளை­யும் இறந்­த­தாக திரு­வாட்டி ஃபோல்பிக் தொடர்ந்து கூறி வந்­தார்.

ஒன்­பது வாரங்­க­ளுக்­கும் மூன்று வய­துக்­கும் இடைப்­பட்ட வய­து­டைய அப்­பிள்­ளை­கள், 1989க்கும் 1999க்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் இறந்­த­னர்.

2021ல் ஆஸ்­தி­ரே­லி­யா­வை­யும் வெளி­நா­டு­க­ளை­யும் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் பலர், திரு­வாட்டி ஃபோல்பிக்கை விடு­விக்­கக் கோரி மனு­வில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

அப்­பிள்­ளை­க­ளின் மர­ணங்­கள், அரி­யவகை மர­பணு மாற்­றத்­து­டன் அல்­லது பிறப்­பில் ஏற்­பட்ட மருத்­துவக் கோளாறு நிலை­யு­டன் தொடர்­பு­டை­யவை என்று புதிய தட­ய­வி­யல் சான்­று­கள் காண்­பித்­த­தாக விஞ்­ஞா­னி­கள் கூறி­ இ­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில், குறைந்­தது 25 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னையை அனுபவித்து வந்த திருவாட்டி ஃபோல்பிக், 55, நேற்று காலை விடு­தலை­யா­னார்.

திரு­வாட்டி ஃபோல்பிக் மன்­னிக்­கப்­பட்டு சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டா­லும், அவருக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பை மாற்றியமைக்க நீதி­மன்­றத்­தில் அவர் தனி­யாக மனுச் செய்ய வேண்­டும் என்று அவ­ரு­டைய நண்­பர் பீட்­டர் யேட்ஸ் கூறி­னார். இந்த நடை­முறை இரண்டு அல்­லது மூன்று ஆண்டு­கள் நீடிக்­கக்­கூ­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!