ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை மேலும் மூப்படைய உள்ளது

கேன்பரா: ஆஸ்திரேலியா அடுத்த நாற்பது ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை எண்ணிக்கையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கவிருக்கிறது. முதிய குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 2060களின் தொடக்கத்திற்குள் 40 மில்லியனுக்கும்மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத்தின் ஆக அண்மைய தலைமுறைகளுக்கு இடையிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அடுத்த 40 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.1 விழுக்காடு மெதுவடையும் என்று முன்னுரைக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளைக் காட்டிலும், அது 1.4 விழுக்காடு குறைவு என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீண்டகால கொள்கைகளுக்கு வழிகாட்டுதலாக அமைய வடிவமைக்கப்பட்ட அந்த முழு அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும்.

ஆஸ்திரேலியக் குடியிருப்பாளர்கள் அதிக காலம் உயிர் வாழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பல்லாண்டுகளில் 85 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!