பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்சுக்கு கிருமித் தொற்று

பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்சுக்கு கொரோனா கிருமி தொற்றியதற்கான அறிகுறிகள் லேசாகக் காணப்படுவதாகவும் மற்றபடி அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது அலுவலகத்தினர் தெரிவித்தனர்.

71 வயது சார்ல்சுக்கும் அவரது மனைவி கமிலாவுக்கும் ‘கொவிட்-19’ இல்லை.

இருந்தாலும் ஸ்காட்லாந்தில் இருவரும் சுயமாக தனிமைப் படுத்திக்கொண்டனர் என்று அறிக்கை தெரிவித்தது.

இளவரசர் சார்ல்சுக்கு கிருமித் தொற்றியது பரிசோதனையில் தெரியவந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

அவருக்கு கிருமித்தொற்று எங்கிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவில்லை என்றும் அண்மைய வாரங்களில் அவர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார் என்றும் அரண்மனை செய்தி குறிப்பிட்டது.

#கொரோனா #பிரிட்டிஷ் #இளவரசர் சார்ல்ஸ்