பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் இருந்து ஏறத்தாழ 100 கி.மீ. தொலைவில் உள்ள பல பகுதிகளிலும் இன்று (அக்டோபர் 7) அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 20 பேர் மாண்டுவிட்டதாகவும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளின் சுவர்களும் கூரைகளும் இடிந்து விழுந்ததில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.
மீட்புப்பணிகள் தொடர்வதாக மாநில உள்துறை அமைச்சர் கூறினார்.
