நிலநடுக்கத்திற்கு மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நியூசிலாந்துப் பிரதமர்

நிலநடுக்கத்திற்கு மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய நியூசிலாந்துப் பிரதமர்

1 mins read
209b446d-417f-43d0-aefd-32768c7ca7fa
நிலநடுக்கம் ஏற்பட்டபோது நிதானத்துடன் காணப்பட்ட நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன். படம்: ஜெசிண்டா ஆர்டர்ன்/ஃபேஸ்புக் -

நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) நிலநடுக்கம் உலுக்கியது. அப்போது, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன், கொவிட்-19 நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிக்கொண்டு இருந்தார்.

நிலநடுக்கத்தை உணர்ந்த அவர், ஒரு சில வினாடிகளுக்கு நிறுத்திக்கொண்டு பின்னர் உரையைத் தொடர்ந்தார்.

ரிக்டர் அளவில் 5.9 என பதிவான நிலநடுக்கம் வெலிங்டனையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் உலுக்கியது. எனினும், கட்டடங்களுக்குச் சேதம் அல்லது மக்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.

குறிப்புச் சொற்கள்