ஊர் ஊராகச் சென்று பணிபுரிவோரிடையே சிறந்த இடங்களாக அபுதாபி, துபாய்

குளிர்காலத்தின்போது ஊர் ஊராகச் சென்று வேலை செய்வோரிடையே அபுதாபியும் துபாயும் சிறந்த இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) தலைநகர் அபுதாபி, பட்டியலில் முதலிடத்தில் வந்தது. துபாய் நான்காம் இடத்தைப் பிடித்தது.

‘பிஸ்னஸ் நேம் ஜெனரேட்டர்’ வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் இது தெரியவந்துள்ளது. உலகின் பிரபலமான 50 நகர்களை அந்த ஆய்வு ஒப்பிட்டது. வைஃபை இணையச் சேவை வேகம், மாதாந்திர வாழ்க்கைச் செலவினம், சராசரி வாடகைச் செலவு, வாழ்க்கைத்தரம், வெயில் நேரம், குளிர்காலத்தின்போது வெப்பநிலை, லண்டனிலிருந்து சராசரி விமானப் பயண நேரம் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்பட்டன.

‘டிஜிட்டல் நோமேட்ஸ்’ என்று அழைக்கப்படும் அத்தகைய ஊழியர்கள், தங்களது விருப்பத்திற்குரிய இடத்திலிருந்து மெய்நிகர் வழியாக வேலை செய்கின்றனர். குளிர்காலம் வரும்போது, சற்று வெப்பமான இடங்களுக்கு அவர்கள் புலம்பெயர்கின்றனர்.

குளிர்காலத்தில் 22.6 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை கொண்ட யுஏஇ, அத்தகைய ஊழியர்களிடத்தில் பிரபலமான நாடாக உள்ளது.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த மற்ற நகர்களில் சிங்கப்பூர், ஒர்லாண்டோ, ஹியூஸ்டன், பியுனோஸ் ஐரெஸ், மெல்பர்ன், லிஸ்பன் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதற்கிடையே, நியூயார்க், ஸூரிக், போஸ்டன், சியேட்டல், லண்டன் ஆகிய நிறுவனங்கள் ஆக செலவுமிக்கவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!