வறண்ட பருவம் நீடித்ததால் உற்பத்தி அதிகம்: மலேசியக் காய்கறி, மீன் விற்பனையாளர்கள்

ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் காய்கறி, மீன் பண்ணையாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெயிலில் பயிர்கள் வாடிப்போய் விளைச்சல் குறைவதற்குப் பதிலாக, வறண்ட பருவம் நீடித்ததால் அவர்களுக்கு விளைச்சல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

மொத்த விற்பனையாளர்கள் விலையைக் குறைத்திருப்பதால் சில்லறை விற்பனையாளர்களுக்கும் மகிழ்ச்சி.

பத்து லன்சாங் சந்தையில் காய்கறிக் கடை நடத்தும் எஸ் காயத்ரி, “காய்கறிகளின் விலை குறைந்ததால் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நாங்களும் விலையை மாற்றியமைக்க முடியும்,” என்று கூறினார்.

“விலை அதிகமாக இருந்தால், தேவை குறையும். வாடிக்கையாளர்கள் குறைவாகவே வாங்குவர். அதனால் காய்கறிகள் வீணாகக்கூடும். அப்போது எங்களுக்கு மொத்தமாக நட்டம் ஏற்படும்,” என்றார் அவர்.

சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் ஒரு கிலோ தக்காளி எட்டு ரிங்கிட்டிற்கு (S$2.27) விற்கப்பட்டதாகக் கூறிய அவர், இப்போது பாதி விலைக்கு விற்பதாகக் கூறினார்.

ஒரு கிலோ மிளகாய் முன்னர் 20 முதல் 22 ரிங்கிட் வரை விற்பனையானது. இப்போது அது 14 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது என்று காயத்ரி கூறினார்.

அதிகரித்துள்ள வெயில், பயிர்களைக் கருக்கிவிடாமல் அவை நன்றாக வளர உதவியுள்ளது என்று காய்கறி விற்பனையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் லீ கா ஷியூவான் கூறினார்.

நாடு முழுவதும் உள்ளூர்க் காய்கறிகளின் விலை குறைந்திருப்பதை அவர் சுட்டினார்.

இந்நிலையில், உள்ளூர் மீன் வகைகள், இறால்கள் என அனைத்துமே தேவைக்கு அதிகமாகவே கிடைப்பதாக மீன் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ கொடுவா மீன் 10 அல்லது 11 ரிங்கிட்டிற்கும் அரைக் கிலோ இறால் 18 முதல் 35 ரிங்கிட்டிற்கும் விற்பனையாவதாக அவர்கள் கூறினர்.

இன்னும் சில மாதங்களுக்கு மீன் விலை அதிகரிக்காது என்றும் போதிய அளவில் மீன்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான வானிலை மீன் வளர்ப்பிற்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!