உல‌க‌ம்

லண்டன்: டைட்டானிக் கப்பலின் ஆகப் பணக்காரப் பயணி என்று கருதப்பட்டவரின் உடலிலிருந்து கிடைத்த தங்கக் கடிகாரம், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த ஏலத்தில் 1.17 மில்லியன் பவுண்டுக்கு (S$2 மில்லியன்) விலைபோனது.
ஜோகூர் பாரு: பத்து பகாட்டின் உல்லாச விடுதி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 11 அரசு ஊழியர்கள் உட்பட போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிலா: கடும் வெப்பம் மற்றும் ஜீப்னி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பிலிப்பீன்ஸ் அனைத்து பொதுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அந்நாட்டுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அபுதாபி: அறுவை சிகிச்சை ஒன்றரை மணிநேரமாக நடந்ததை அடுத்து 63 வயது மாது ஒருவரின் கருமுட்டையிலிருந்து 30.5 கிலோகிராம் கட்டியை அபுதாபி மருத்துவர்கள் அகற்றினர்.
குவாங்ஸொ: தென் சீனாவின் குவாங்ஸொ நகரில் ஏற்பட்ட சூறாவளியில் ஐவர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.