புதுமைப் பாதையில் வேலைவாய்ப்புகள்

தொழில் செய்வது வருமானம் ஈட்டுவதற்காக மட்டுமே என்ற சிந்தனை ஒருசிலரிடையே இருந்தாலும் மனநிறைவு பெறுவதையும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் முன்னிலைப்படுத்தி இக்கால இளையர்கள் சிலர் தங்களின் வாழ்க்கைத்தொழிலைத் அமைத்துக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு தங்களின் வேலையில் லயித்து, வாழ்க்கையில் வளர்ச்சிகண்டு வரும் நால்வரின் அனுபவங்களை அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.

‘அருவருப்பான தொழில் அல்ல’

ஊட­கத் துறை­யில் தனது எதிர்­கா­லத்­தைக் கற்­பனை செய்து பார்த்­தி­ருந்­தார் திலிப் டிக்­ரோஸ். பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அத்­து­றை­யில் பட்­ட­ய­மும் பெற்­றார். அதில் திருப்தி காணாத அவர், குழாய்த்­தொ­ழிலை நாடி­னார்.

குழாய்த்­தொ­ழில் என்­பது கழி­வு­க­ளைக் கையாள்­வது மட்­டு­மல்ல, தண்­ணீர் வள நிர்­வா­கம் குறித்த நுட்­ப­மான அறி­வி­யல் அதில் பொதிந்­துள்­ளது என்­பது திலிப் சிறு­வ­ய­தி­லி­ருந்தே உணர்ந்­த­தா­கும். பதின்ம வய­தி­லி­ருந்தே பிழைப்­புக்­காக குழாய்த்­தொ­ழி­லில் ஈடு­பட்­ட­வர் அவ­ரின் அப்பா டிகுரூஸ். அத­னால் குழாய் அமைப்பு தொடர்­பான தொழி­லா­ளர் உரி­மத்­தைப் பெற டிலிப் சற்­றும் யோசிக்­க­வில்லை.

பொறி­யி­யல் பின்­னணி இல்­லாத திலிப், பெரி­தும் நாடி­யது தந்­தை­யின் வழி­காட்­டு­த­லையே. நான்­காண்­டு­க­ளுக்­குக் கட்­ட­டக் கட்­டு­மான ஆணை­யப் பயிற்­சிக் கழ­கத்­தில் குழாய் அமைப்பு தொடர்­பான பயிற்சி மேற்­கொண்டு வடி­கால் அமைப்பு, குழாய் பொருத்­து­தல் முத­லி­ய­வற்­றில் அவர் தேர்ச்சி பெற்­றார்.

“குழாய் அமைப்பு தொடர்­பான தொழில் அரு­வ­ருப்­பான ஒரு வேலை என்று சிலர் நினைப்­ப­துண்டு. உண்­மை­யில் அது இன்­றி­ய­மை­யாத ஒன்று. பட்­டக்­கல்வி பெற்­ற­வ­ருக்கு இணை­யான சம்­ப­ள­மும் ஈட்­டித் தரக்­கூ­டிய ஒரு பணி,” என்­றார் 28 வயது திலிப் டிகுரூஸ். சிங்­கப்­பூ­ரின் அதி­ந­வீன தண்­ணீர் அமைப்­பு­க­ளைத் தான் ஈடு­பாட்­டு­டன் கவ­னிக்­கத் தொடங்­கி­ய­தா­க­வும் திலிப் கூறி­னார்.

தந்­தை­யு­டன் இணைந்து நிறு­விய ‘ஜேடி வாட்­டர்ஸ்’ எனும் தண்­ணீர் அமைப்பு நிறு­வ­னத்­தில் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­கச் செயல்­ப­டு­கி­றார் திலிப். முக்­கி­யத் தேசிய நீர்­வ­ளத் திட்­டங்­களில் இவ­ரது பங்­கும் உண்டு. பொது பய­னீட்­டுக் கழ­கத்­தின் மூன்­றாம் துவாஸ் நீர் ஆலை, துவாஸ் தண்­ணீர் மீட்பு ஆலை ஆகி­யவை அதில் அடங்­கும்.

சாதா­ரண தண்­ணீர் உதவி அமைப்­பா­ள­ராக தொடங்­கிய அவ­ரின் பய­ணம் பொதுப் பய­னீட்டு கழ­கத்­தில் 15 ஆண்­டு­கா­லம் நீடித்­தது. தற்­போது ‘ஜேடி வாட்­டர்ஸ்’ நிறு­வ­னத்­தின் ஆலோ­ச­க­ரா­க­வும் சிங்­கப்­பூர் குழாய்த்­தொ­ழில் சங்­கத்­தின் தலை­வ­ரா­க­வும் அவர் செயல்­ப­டு­கி­றார்.

“இளம் தலை­மு­றை­யி­ன­ரைக் குழாய்த்­தொ­ழி­லில் காண்­பது அரிது. இளை­யர்­கள் தொழில் குறித்த தவ­றான எண்­ணம் கொண்­டுள்­ள­னர். அதனை மாற்ற நாங்­கள் முயல்­கி­றோம்,” என்­றார் தந்தை டிகுரூஸ் மாசி­லா­மணி, 61.

எதிர்­கா­லத்­துக்­குத் தயா­ரா­கும் வகை­யில் தன் நிறு­வ­னத்­தின் நிபு­ணத்­துவ ஆற்­ற­லைப் பெருக்­கிக்­கொள்­ளத் திட்­ட­மி­டு­கி­றார் திலிப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!