தட்டிப் பார், முட்டிப் பார், மோதிப் பார், முயன்று பார்

கலப்­புத் தற்­காப்­புக் கலை (எம்­எம்ஏ) வீர­ரான இளை­யர் அமீர் கான் அன்­சாரி, நினைத்­தா­லும் தன்­னால் தவிர்க்க முடி­யாத ஒரு பெருஞ்­சிக்­க­லால் அலைக்­க­ழிக்­கப்­பட்­ட­வர்.

‘டூரெட்ஸ்’ நோய்க்­கு­றி­யால் பாதிக்­கப்­பட்ட அவர், பேசும்­போது இடை­யி­டையே ஒரு­வித கீச்­சி­டும் சத்­தத்தை எழுப்­பு­வார். அவ­ரின் தலை சில நேரங்­களில் திடீ­ரென வேக­மாக அசை­யும். அவ­ரின் முக பாவ­னை­கள் மாறும். இந்த அசை­வு­கள் அவர் உற்­சா­க­ம­டைந்­தாலோ உணர்ச்­சி­வ­சப்­பட்­டாலோ வழக்­கத்­தைக் காட்­டி­லும் பன்­மடங்­கா­கும்.

‘டூரெட்ஸ்’ நோய்க்­கு­றிக்­குச் சிகிச்சை இல்லை. உல­கின் ஒரு விழுக்­காட்­டிற்­கும் குறை­வா­னோர் டூரெட்­ஸால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தனது இளம்­வ­ய­தில் அதி­கம் அறி­யப்­ப­டாத இந்­நோ­யி­னால் சக மாண­வர்­க­ளின் கேலி கிண்­ட­லுக்கு ஆளா­னார் அமீர். தற்­போது எம்­எம்­ஏ­வில் மிளி­ரும் அவ­ருக்கு சண்­டைக் களமே அடைக்­க­ல­மாக அமைந்­தது.

“எனது தலை திடீ­ரென அசை­வ­தால் என்­னைப் புண்­ப­டுத்­தும் வகை­யி­லான பெயர்­க­ளைச் சொல்­லிச் சிலர் கேலி செய்­வார்­கள். என்­னைப் போல நடித்­துக் காட்­டிச் சிரித்­துக்­கொள்­வார்­கள். சிறு­வ­ய­தில் என்­மீதே எனக்கு வெறுப்­பி­ருந்­தது. யாரி­ட­மும் பேசக்­கூட பய­மாக இருந்­தது,” என்­றார் 28 வயது அமீர்.

ஒவ்­வொரு நொடி­யும் தமது உடல் அசை­வு­களை, உணர்­வு­களைக் கண்­கா­ணிக்க வேண்­டிய சூழல் இப்­போ­தும் உள்­ள­தெ­னக் கூறுகிறார் அமீர்.

காலப்­போக்­கில் இந்த நோய் தொடர்­பி­லான அசை­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த அவர் பழ­கிக்­கொண்­டார். மனதை ஒரு­நி­லைப்­ப­டுத்­தும் எம்­எம்ஏ, அவ­ருக்­குப் பெரி­தும் கைகொ­டுத்­தது.

சண்­டை­போ­டு­வ­தில் ஈடு­ப­டத் தொடங்­கி­ய அமீரின் போக்­கைக் கவ­னித்த தந்தை தஜூ­தீன், அவ­ரின் ஆர்­வத்­தைத் திசை­தி­ருப்ப முயன்­றார். முறை­யான சண்­டைப் பயிற்­சிக்கு அமீரை அனுப்பி ஊக்­கு­வித்­தார். உயர்­நி­லைப் பள்­ளி­யில் நாள் தவ­றா­மல் உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் பயிற்சி மேற்­கொள்ளத் தொடங்­கி­னார் அமீர்.

கலப்­புத் தற்­காப்­புக் கலை மீதான அவ­ரின் ஆர்­வம் அவரை அமெ­ரிக்கா வரை கொண்டு சென்­றது. எம்­எம்ஏ பயில அதிக வாய்ப்­பு­கள் இருந்த அமெ­ரிக்­கா­விற்­குத் தனது 17வது வய­தில் சாதா­ரண நிலைத் தேர்வு முடிக்­கா­மே­லேயே அவர் சென்­றார்.

“சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நிரந்­த­ர­மாக ஓடி­வி­ட­லாம் என்றே நினைத்­தேன். புது அடை­யா­ளம், புது வாழ்வு, புது அமீர் என்­றெல்­லாம் திட்­ட­மிட்­டேன்,” என்று கூறிய அவ­ரது கன­வில் தேசிய சேவை ஆற்­றும் கட்­டா­யம் குறுக்­கிட்­டது.

அவ­ருக்கு இருந்த அதீத ஆர்­வத்­தி­னால் தனது நோயைக் கட்­டுப்­ப­டுத்­தவோ மறைக்­கவோ முயற்சி செய்­வ­தை­விட மக்­க­ளின் கண்­ணோட்­டங்­க­ளைப் பொருட்­ப­டுத்­தா­மல் இருக்க அவர் கற்­றுக்­கொண்­டார்.

2014ல் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பிய அமீரை உள்­ளூர் மேடை­கள் பல வர­வேற்­றன. ஒரு முழு­நேர எம்­எம்ஏ வீர­ராக 2018ஆம் ஆண்­டின் உலக (சாம்­பி­யன்­ஷிப்) போட்­டி­களில் இறு­திச் சுற்­றுக்கு அவர் தகுதி­பெற்­றார்.

அதில் அடைந்த தோல்­வி­யும் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்­வி­களும் அவரை மனந்தளர வைத்தன.

தன் தந்தை மூளைப் புற்­று­நோ­யால் 2020ல் மறைந்­தது அமீ­ரின் வாழ்­வில் மற்­றோர் இடி. தமது ஆகப் பெரிய ஆத­ர­வா­ளரை அவர் இழந்­து­விட்­டார்.

“இந்த நோய்­தான் வாழ்­வி­லேயே நான் சந்­திக்­கக்­கூ­டிய மிகப் பெரிய சவால் என்று எண்­ணி­னேன். காலப்­போக்­கில், அதை­விட பெரிய தோல்­வி­கள், சிக்­கல்­கள் ஆகி­ய­வற்­றைக் கையா­ளும் மனப்­பக்­கு­வத்­தைப் பெற்­றேன்,” என்­றார் அமீர்.

ஒரு­கா­லத்­தில் தமக்கு நண்­பர்­களும் வாழ்க்­கைத் துணை­யும் அமை­யாது என்றே நினைத்த அமீர், தற்­போது ஒரு கண­வ­னா­க­வும் மூன்று வயது மக­னுக்­குத் தந்­தை­யா­க­வும் இருக்­கி­றார்.

பிஎஸ்பி கல்­விக்­க­ழ­கத்­தில் விளை­யாட்டு அறி­வி­யல் பயின்று கடந்த ஆண்டு பட்­டம் பெற்ற அவர், திறன்­களை மேம்­படுத்­தி மீண்­டும் களத்­தில் இறங்­கும் உறு­தி­யில் உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!