சிங்கப்பூரில் முன்னிலை ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவிக்க அழைப்பு

சிங்கப்பூரில் முன்­னிலை ஊழி­யர்­க­ளின் அயராத பணிக்கு பாராட்­டுத் தெரி­விக்­கும் வகை­யில் வீடுகளில் இருக்கும் மக்­கள் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து கைதட்­டும் நிகழ்வு இன்று இரவு 8 மணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­க­ளுக்கு இதற்­கான அழைப்பு ஃபேஸ்­புக் மூலம் விடுக்­கப்­பட்டு வரு­கிறது. ‘Clap For #SGUnited’ என்ற ஒரு அமைப்பு, இன்­றி­ரவு சரி­யாக 8 மணிக்கு சன்­னல்­கள், வீட்டு வாசல், வெளி­வா­சல்­களில் மக்­கள் நின்­ற­படி ஒன்றுசேர்ந்து கைதட்டி பாராட்­டு­மாறு அழைக்­கிறது.

இந்த முயற்சியை வழிநடத்தும் மார்ட்டின் வெர்கா என்பவர், பிரிட்டன், கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் கைதட்டி, தாள வாத்தியக் கருவிகளை வாசித்து முன்னிலை ஊழியர்களுக்கு பாராட்டுதலை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூரிலும் நமக்குரிய பாணியில் நன்றி தெரிவிக்கலாம் என்ற யோசனை தமக்கு எழுந்ததாகக் கூறினார்.

மருத்துவர்கள், தாதியர்கள், பொருள் விநியோக ஊழியர்கள், பொருள் சேமிப்புக் கிடங்கு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பேரங்காடி ஊழியர்கள், பாதுகாவலர்கள் உட்பட சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் அனைவரும் முன்னிலை ஊழியர்களில் அடங்குவர்.

முன்னிலை ஊழியர்களுக்கு பாராட்டுதலை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவு இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி
முன்னிலை ஊழியர்கள்
கொரோனா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!