தஞ்சோங் பகார் முனையத்தில் மாபெரும் கொவிட்-19 வளாகம்; 15,000 பேர் வரை தங்கலாம்

தஞ்சோங் பகார் முனையத்தில் 15,000 பேர் வரை தங்க வைக்கப்படக்கூடிய மாபெரும்  தற்காலிக தங்குமிட வசதியை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் பகார் முனையத்தில் 15,000 பேர் வரை தங்க வைக்கப்படக்கூடிய மாபெரும்  தற்காலிக தங்குமிட வசதியை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் பகார் முனையத்தில் 15,000 பேர் வரை தங்க வைக்கப்படக்கூடிய மாபெரும்  தற்காலிக தங்குமிட வசதியை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் பகார் முனையத்தில் 15,000 பேர் வரை தங்க வைக்கப்படக்கூடிய மாபெரும் தற்காலிக தங்குமிட வசதியை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, கொவிட்-19 நோயாளிகள், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றவர்களைத் தங்க வைக்க அந்தப் பெரிய வளாகம் அமைக்கப்படுகிறது.

சில நாட்களாக அங்கு அடிக்கடி சென்று வந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள், அங்கு பெரிய கூடாரங்கள் அமைக்கப்படுவதாகவும் கார்கள் பல நிறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அந்த முனையத்துக்குள் சென்று வருவதையும் காண முடிந்தது.

அந்த முனையத்தின் துறைமுக செயல்பாடுகள் துவாசுக்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அந்த இடம் காலியாக இருந்தது. முனையத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் 2017ஆம் ஆண்டிலேயே மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்சம் ஆறு வரிசைகளில் கூடாரங்கள் ஏற்கெனவே அங்கு அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த சில வாரங்களாக, அரசாங்கம் தற்காலிக தங்குமிடங்கள் பலவற்றைத் தயார்ப்படுத்தி வருகிறது.

விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் கிருமிப் பரவலின்றி இருப்பவர்களை வேறு இடத்துக்கு மாற்றவும், கிருமித்தொற்று சிகிச்சை பெறுவோரை பின்னர் சமூக தனிமைப்படுத்தும் இடங்களுக்கு மாற்றவும் ஏற்ற இடங்களாக அரசாங்கம் அத்தகைய இடங்களைத் தயார்ப்படுத்தி வந்தது.

விடுதிகளில் தங்கியிருந்த, அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடக்கூடிய 10,000 வெளிநாட்டு ஊழியர்கள் ராணுவ முகாம்கள், மிதவை ஹோட்டல்கள், விளையாட்டுக் கூடங்கள், காலியான வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் போன்ற 18 மாற்று இடங்களுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் தஞ்சோங் பகார் முனையத்தில் இந்த மாதம் நிறுத்தப்பட்ட மிதவை விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

ஊழியர்களைத் தங்கவைக்க சொகுசுக் கப்பல்களைப் பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. சூப்பர்ஸ்டார் ஜெமினி கப்பல் தற்போது தஞ்சோங் பகார் முனையத்துக்கு அருகில் உள்ள மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் 11,178 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; அவர்களில் பெரும்பாலானோர் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சிங்கப்பூர்
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!