கொரோனா நோயாளிகளை பராமரித்த எட்டு மாத கர்ப்பிணி மருத்துவர், இரு தாதியர் மரணம்

மதுரை மாந­க­ராட்சி அனுப்­பா­னடி நகர்ப்­புற ஆரம்ப சுகா­தா­ரத்­து­றை­யில் பணி­பு­ரிந்து வந்தவர் மருத்­து­வர் சண்­மு­கப்­ரியா, 31. படம்: விகடன்

மதுரை மாந­க­ராட்சி அனுப்­பா­னடி நகர்ப்­புற ஆரம்ப சுகா­தா­ரத்­து­றை­யில் பணி­பு­ரிந்து வந்தவர் மருத்­து­வர் சண்­மு­கப்­ரியா, 31, (படம்). எட்டு மாத கர்ப்­பி­ணி­யாக இருந்­தா­லும் கொரோனா தொற்று பர­வும் இந்த நெருக்­க­டி­யான காலத்­தில் அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் மக்­கள் உயிர்­காக்­கும் பணி­யில் ஈடு­பட்­டு ­வந்­தார் இவர்.

இந்­நி­லை­யில் அவ­ருக்­குக் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. சிகிச்­சைக்­காக மதுரை அரசு ராஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த அவ­ருக்கு மருத்­து­வர்­கள் தீவிர சிகிச்சை அளித்து வந்­த­னர்.

இந்த நிலை­யில் நுரை­யீ­ர­லில் 90 விழுக்­காடு தொற்று ஏற்­பட்­ட­தால் சண்­மு­கப்­ரியா சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் நேற்று முன்­தி­னம் (மே 8) உயி­ரி­ழந்­தார். இந்­தச் செய்தி மருத்­து­வர்­கள் மத்­தி­யில் கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

இது தொடர்­பாக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வெளி­யிட்­டுள்ள இரங்­கல் குறிப்­பில், “டாக்­டர் சண்முகப்ரியா கொரோனா பெருந்­தொற்­றுக்கு ஆளாகி உயி­ரி­ழந்­தி­ருப்­பது மிகுந்த வேதனை அளிக்­கிறது.

“மருத்­து­வர்­களும் கொரோனா நோய்த்­தொற்று தடுப்பு மற்­றும் சிகிச்சை பணி­யில் முன்­க­ளப்­பணி வீரர்­க­ளாக நிற்­கும் அனை­வ­ரும் தங்­க­ளது பாது­காப்­பை­யும் உறுதி செய்­திட அறி­வு­றுத்தி இருக்­கி­றேன்,” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதே போல பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் மருத்­து­வர் சண்­மு­கப்­ரியா மர­ணத்­துக்கு தங்­க­ளது இரங்­கல் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

ஒரே நாளில் இரு தாதியர்

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­ம­னை­யில் இத­ய­வி­யல் பிரி­வில் கொவிட் சிகிச்­சைப் பணி­யில் ஈடு­பட்டு வந்த இந்­திரா, 41, என்ற தாதி­யர் நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தார். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இவர் இதே மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் இறந்­து­விட்­டார்.

இச்­சம்­ப­வம் நிகழ்ந்த ஒரு சில மணி நேரத்தில் வேலூர் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்­று­வந்த பிரேமா, 52, என்ற தாதி­ய­ரும் நேற்று மர­ண­ம­டைந்­தார். சுமார் ஒன்­றரை ஆண்டாக கொரோனா நோயா­ளி­க­ளுக்கு இவர் சேவை செய்­து­ வந்­தார்.

தமிழ்நாடு
கிருமித்தொற்று
கர்ப்பிணி
மருத்துவர்
மரணம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!