புக்கிட் மேரா வியூ: எட்டு புளோக்வாசிகளுக்கு சுமூகமாக நடந்த பரிசோதனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் மேரா வியூவில் உள்ள எட்டு வீவக புளோக்குகளில் குடியிருப்போர் இன்று (ஜூன் 20) கொவிட்-19 கட்டாய பரிசோதனை செய்துகொண்டனர். அவர்கள் யாரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவில்லை.

பரிசோதனை சுமூகமாகத் தொடங்கியது. பெரும்பாலானவர்கள் 20 நிமிடங்கள்கூட காத்திருக்கவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர். நடமாட சிரமப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புளோக் 116, 117, 118, 119, 124A, 124B, 125, 126 ஆகியவற்றில் வசிப்போருக்கு அப்பகுதியில் மூன்று இடங்களில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டது.

புக்கிட் மேரா வியூவில் இருக்கும் புளோக் 119ல் வசிக்கும் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்குத் தொற்று இருந்தது தெரிய வந்ததை அடுத்து கட்டாய பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்பகுதியில் உள்ள சில புளோக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரில் கிருமி எச்சங்கள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த எட்டு புளோக்குகளும், எண் 115 புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்திற்கு அருகே இருக்கின்றன.

இந்த நிலையம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய திறந்த இட கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையது. இந்தக் குழுமத்தில் தொற்றுக்கு ஆளான 70 பேர் உள்னர்.

புக்கிட் மேரா வியூ
கிருமித்தொற்றுப் பரிசோதனை
புளோக்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!