எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

கிம் மோ சாலை சந்தை, உணவு நிலையத்தில் இன்று (ஜூலை 17) மீன் வாங்கத் திரண்ட வாடிக்கையாளர்கள். படம்: சா ஹே வோன்

ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவாகி இருப்பதைத் தொடர்ந்து, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளது.

அந்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஹோங் லிம் சந்தை, உணவு நிலையத்திற்கு கொரோனா பரவிவிட்டதால், அது மற்ற சந்தைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லாச் சந்தைகளிலும் உள்ள மீன்கடைக்காரர்கள் எங்களது பரிசோதனை நிலையங்களுக்கு வந்து சோதனை செய்துகொள்ள தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தொடர்ந்து தங்களது உடல்நிலையைக் கண்காணித்துக்கொள்ள ஏதுவாக ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்,” என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிவரை ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் பணியற்றிய அனைவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் அத்துறைமுகத்திற்கு வந்து சென்ற அனைவர்க்கும் சிறப்புப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு கூறியிருக்கிறது.

ஜூரோங் மீன்பிடித் துறைமுகம்
மீன்கடைக்காரர்கள்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!