கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெறாதவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளில் சலுகை அளிக்கப்படும்.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ ரீதியாக தகுதியில்லை என்பதைக் காட்டும் சான்றிதழை அத்தகையோர் மருத்துவரிடமிருந்து பெற வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரைப் போன்றே உணவகங்களில் அமர்ந்து உணவருந்தவும் கடைத்தொகுதிகளுக்குச் செல்லவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
நவம்பர் 15ஆம் தேதி முதல், பொது மருத்தகம் அல்லது பொது அல்லது தனியார் சுகாதாரப் பராமரிப்புக் கழகத்திற்குச் சென்று அத்தகையோர் மருத்துவச் சான்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தது.